தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அனைவரும் வாக்களிக்க வசதியாக தமிழக அரசு, ஏப்ரல் 18ம் தேதி (வியாழன்) பொது விடுமுறையாக அறிவிக்கிறது. என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply