டீசல், உதிரி பாகங்களின் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி மாநகர சுற்றுவட்டார எர்த்மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்
தூத்துக்குடி:-

டீசல், ஆயில், உதிரி பாகங்களின் விலை உயர்வு மற்றும் சாலை வரி ஏற்றத்தை கண்டித்து தூத்துக்குடி மாநகர சுற்றுவட்டார எர்த்மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகர சுற்றுவட்டார எர்த்மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதனையொட்டி தூத்துக்குடி பிரையன்ட்நகரில் தூத்துக்குடி மாநகர சுற்றுவட்டார எர்த்மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் டி.சோலையப்பராஜா தலைமை வகித்தார். செயலாளர் எம்.ஜி.ராஜா முன்னிலை வகித்தார். பொருளாளர் எஸ்.பீர்மைதீன் வரவேற்று பேசினார்.
பின்னர், சங்க தலைவர் டி.சோலையப்பராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், டீசல், ஆயில், உதிரி பாகங்களின் விலை உயர்வு மற்றும் சாலை வரி, இன்சூரன்ஸ் மற்றும் அனைத்து பொருட்களின் விலை உயர்வால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, விலை உயர்வை கண்டித்து இன்று (திங்கள்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது. மேலும், இன்றைய தினத்தில் இருந்து ஜேசிபி வாடகை மணிக்கு 1500 எனவும், டோசர் வாடகை மணிக்கு 2500 எனவும், மினி ஹிட்டாச்சி வாடகை மணிக்கு 1500 எனவும், ஜேசிபி பிரேக்கர் மணிக்கு 2500 எனவும், ஜேசிபி மாத வாடகை 1,20,000 எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.











