முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா: தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி
தூத்துக்குடி:-

தமிழ்நாடு முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் ஆலோசனையின்படி, சிறுகுறுநடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன்ராஜா வழிகாட்டுதலின், தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் அய்யனடைப்பில் மாபெறும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் கே.எம்.மகேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்று விளையாடினர்.
இதில், இறுதி போட்டியில் வெற்றி பெற்ற எம்.எஸ்.எம். அணி முதல் பரிசை வென்றது. நாகா பாய்ஸ் அணி இரண்டாம் பரிசையும், காடோடி பண்ணை அணி மூன்றாம் பரிசையும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2ஆம் பரிசாக ரூ.10 ஆயிரமும், 3ஆம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 4ஆம் பரிசாக ரூ.5 ஆயிரமும், 5வது பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணியினருக்கு கூட்டுடன்காடு பா.ஹரிபாலகிருஷ்ணன், எஸ்.மாரிச்செல்வன், முடிவை ஆறுமுகம், வழக்கறிஞர் கே.எம்.மகேந்திரன், சி.முத்துமாரியப்பன், ஆர்.பி.மாரியப்பன், மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வி.மாரிச்செல்வம் ஆகியோர் வெற்றி கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கினர்.
நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ஜெபஸ்துராஜ், மாவட்ட மாணவரணி இணை அமைப்பாளர்கள் சதீஷ், சுடலை, மாரிச்செல்வம், சேது, ஒன்றிய இணைச்செயலாளர் ஆனந்தகுமரகுரு, ஒன்றிய துணைச்செயலாளர் ராஜேஷ் சாமுவேல், ஒன்றிய பொருளாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.











