தமிழகத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு. லோக்சபா தேர்தல் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் கவுண்டவுன் தொடங்கிவிட்டதால், தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்து இருக்கிறது.
இதற்கான பிரச்சாரம் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் எப்போது நடக்கும் என்று தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26 தேதி.
வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 27 செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 29ம் தேதி. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி செய்யப்படும்.
புதுச்சேரி:
இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டதிலேயே தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அதேபோல புதுச்சேரிக்கும் இதே நாளில் வாக்குப் பதிவு நடைபெறும்.
Leave a Reply