ஜவ்வாதுமலை, திருவண்ணாமலை :-
நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசன் மூலம் பயின்ற மலைவாழ் பழங்குடி இளைஞர் பன்னீர் உலக சாதனை
அம்மா, தம்பிக, அண்ணன்கள் இதுதான் பன்னீரோட உலகம். இங்கிருக்கும் ஓர் உண்டு உறைவிடப்பள்ளியில் படிச்சிட்டிருந்த பன்னீருக்கு ஒரு கிறித்துவ தொண்டு நிறுவனத்தின் வழிகாட்டல் கிடைத்து.
அவர்கள் மூலம் சென்னைக்குப் போய்ப் படிச்சாரு. சென்னையில SSLC முடிச்சிட்டு, மேல்நிலைக்கல்விக்காக மீண்டும் ஜவ்வாதுமலைக்கே வருகிறார்; அரசு வனத்துறை பள்ளியில் +2 முடிச்சி, பள்ளிக்கூடத்துல முதல் மதிப்பெண் வாங்குகிறார்.
முதல் மதிப்பெண் பெற்றதுக்காக இந்த பேனர் ஜவ்வாதுமலையிலிருந்து போளூருக்குப் போகும் வழியில் ‘மிதி’ என்ற இடத்தில் அவங்க ஊர்ப் பசங்க எல்லோரும் சேர்ந்து பன்னீருக்கு ஒரு பேனர் வைக்கிறாங்க. இந்த இடத்திலிருந்துதான் பன்னீரின் கிராமமும் பிரிந்து செல்கிறது.
காடுகளுக்குள் காட்டாற்று வெள்ளங்களையெல்லாம் கடந்துதான் பன்னீரின் கிராமமான கல்லாத்தூருக்குப் பயணப்பட வேண்டும். இந்த ஊரில் ஒரு அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஓர் ஆசிரியரின் கண்ணில் இது படவே… எப்படியாவது பன்னீரின் மேற்படிப்புக்கு வழிகாட்ட வேண்டுமென்று முடிவு செய்து அகரம் பவுண்டேசனுக்கு அப்ளை பண்றோம்.
அந்த வருடத்தில் மட்டும் +2 முடிச்ச 14 பிள்ளைகள் மற்றும் அவங்க பெற்றவர்களில் ஒருத்தரோடு சென்னைக்குப் போறோம். என்னோடவும் அந்த சாரோட சேர்த்து கிட்டத்தட்ட 30 பேர் போனோம். அந்த வருசம்தான் எனக்கு அகரம் பற்றித் தெரியும்.
அதுவும் உஷா ராஜேந்திரன் பாப்பா மூலமாக. நாங்கள் போனபோது எல்லா சேர்க்கையும் முடிந்த நிலையில் தான் நாங்கள் அங்கு சென்றோம் என்று நினைக்கிறேன். ஆனாலும் போன பிள்ளைகள் பலருக்கும் ஒரு குறிப்பிட்ட Course கொடுத்தாங்க.
அதுல ரெண்டு பேர் மட்டும்தான் படிக்கவே போனாங்க. அதுல ஒருத்தர் பன்னீர், இன்னொருத்தர் திருமுருகன். பன்னீருக்கு வேலூர் VIT லயும் திருமுருகன் சென்னையிலுள்ள ஒரு கல்லூரியிலும் படிச்சி முடிச்சாங்க.
அகரத்தோட சிறப்பு என்னனா படிப்பு முடிஞ்சதும் எதாவது ஒரு வேலைக்கு guarantee இருக்கும். ரெண்டு பேருக்குமே வேலைக் கிடைச்சிடிச்சி. பன்னீர் பூனேவுக்குப் போனாரு. கொஞ்ச நாள் அங்க வேலை செஞ்சிட்டு transfer வாங்கிட்டு இப்போ சென்னை branch ல வேலை பார்க்கிறார்.
எதையாவது சாதிக்கணும் அப்படிங்கிறதுதான் பன்னீரோட இலட்சியம். மாரத்தான் போகணும், Sports ல ஜெயிக்கணும்னு தொடர்ந்து முயற்சியெடுத்துக்கிட்டு வராரு. வேலை நேரம் போக மீதி நேரங்களில் Motivational Quotes எழுதிக்கிட்டிருந்தவருக்கு Lincoln Book of Records மூலம் வாய்ப்புக் கிடைத்து இன்று ஜவ்வாது பன்னீர் வெளியுலகத்திற்குத் தன்னுடைய முயற்சியின் படிக்கட்டுகளைக் காண்பித்துக்கொண்டிருக்கிறார்.
இப்படி, எத்தனையோ பன்னீர்களுக்கும், என்னைப் போன்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழிகாட்டியாகவும் ஏணியாகவும் சூர்யா சிவகுமார் அவர்களும்,ஜெயஸ்ரீ, ஆண்டனி அண்ணன், உஷா, நீலா, மன்சூர், சரவணன் இன்னும் அங்கிருக்கும் (அகரத்தில்) ஒவ்வொருவரும் களப்பணியாளர்களாக இருந்து செயல்பட்டு வருகின்றனர்.
கல்வியை ஆயுதமாக்கு என்பதைவிட அதை ஆயுதமாக்குவதற்கு நான் உனக்கு வழிகாட்டுகிறேன்;
உதவுகிறேன் என்ற அடிப்படையில் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மட்டுமல்ல இன்று அவரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் சமூகநீதியை உள்வாங்கி, மக்களைப் பிளவுப்படுத்தும் சனாதன சக்திகளுக்கு எதிராகக் களமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆசிரியை மகாலட்சுமி
Leave a Reply