அரக்கோணம் ரயில் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நாடகம்

Share Button

அரக்கோணம் :-

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பல உயிர்கள் இழந்த நிலையில், வாழ்வாதாரம் இழந்து கொரோனாவால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும், ஒருவேளை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவிட்டால் அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பனவற்றை விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்நிலையத்தில் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

கொரோனா விழிப்புணர்வு நாடகம்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையினரும், மற்றும் SBA கல்வி நிறுவனம் அரக்கோணம் இணைந்து கொரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். இதில் ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளர் திருமதி விஜயலட்சுமி அவர்களும் மற்றும் SBA கல்வி நிறுவனர் திருமதி. சித்ரா கஜேந்திரன் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நோய்தடுப்பு வழிமுறைகள்

நிகழ்ச்சியில் அரக்கோணம் ரயில் பயணிகளுக்கு கொரோனா நோய் ரயில்களில் பயணம் செய்யும் போது எவ்வாறு நோய் பரவுகிறது என்றும் இது சம்பந்தமாக SBA கல்வி நிறுவன மாணவர்கள் நாடகத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த நிகழ்ச்சியில் பயணிகளுக்கு மருத்துவ குழுவினரால் தடுப்பூசி போடப்பட்டது. பயணிகளுக்கு
துண்டுபிரசுரம் கொடுத்தும் மாஸ்க், சானிடைசர், வழங்கியும் சமூக இடைவெளியை
கடைப்பிடிப்பது பற்றியும் அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும் பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *