கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொடக்க பள்ளியில் பன்முக திறன் கொண்ட மாணவர்களுக்கு வானவில் விருதும் பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டார வள அலுவலர் கோ.மாதேஸ்வரி தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் கொ.மாரிமுத்து, வட்டார வள அலுவலர் என்.எ.பி.நாசர், தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கு.கணேசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள முப்பது நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் பன்முக திறன் கொண்ட மாணவர்களுக்கு வானவில் விருதும் பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
படிப்பு மற்றும் பிற இணைச் செயற்பாடுகளை சிறப்பாக செய்த மாணவர்களின் திறமையை பாராட்டி வானவில் விருது வழங்கப்பட்டது என ஜேஆர்சி ஆசிரியர் கணேசன் கூறினார்.
முன்னதாக அனைவருக்கும் இனிப்பும் உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் இராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, ஞானசேகரன், சாந்தி, தாசூன், ஜோதி, சியாமளா, சரஸ்வதி, முருகன், ஆசிரியர்கள் உமா, சக்தி, தொண்டு நிறுவன நிர்வாகிகள் லட்சுமி, உமாமகேஸ்வரி, ரமா, சசி என்கிற கோமதி, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply