வருகின்ற பாராளுமன்றத் தேர்தலையொட்டி பர்கூரில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தின் போது மக்கள் செல்வர் டி.டி.வி. தினகரனின் கரத்தினை வலுப்படுத்த இப்போதிருந்தே பூத் கமிட்டி ஆக்கப் பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என பழனியப்பன் வலியுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தியாகத் தலைவி சின்னம்மாவின் வழிகாட்டுதலின்படி மக்கள் செல்வர் அண்ணன் டி.டி.வி.தினகரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதி வாரியாக வளாகத்தில் மாவட்ட கழக வளர்ச்சி குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த முதல்கட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கோ.ரவிச்சந்திரன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான பழனியப்பன், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் புகழேந்தி, முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான பாண்டுரங்கன் ஆகியோர் கலந்துக் கொண்டு கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்க உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனிச்சாமி விரைவில் தமிழகம் மட்டுமின்றி மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்திற்குள் எடப்பாடியின் பினாமி ஆட்சி கவிழ்ந்து விடும் என்பதால் பூத் கமிட்டி பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட உள்ள பொறுப்பாளர் தங்களது பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும்.
குறிப்பாக கட்சிப் பணிகள் மேற்கொண்டுள்ளவர் கட்சியினை வலுப்பத்த புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் அதிக ஆர்வத்தினை காட்ட வேண்டும்.
ஆக ஒட்டுமொத்த கழகப் பொறுப்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை உணர்ந்து மக்கள் செல்வர் அண்ணன் டி.டி.வி.தினகரனின் கரத்தினை வலுப்படுத்த வேண்டும் என பழனியப்பன் வலியுறுத்தினார்.
மேலும் இந்த கூட்டத்தின் போது பர்கூர் பேருராட்சி கழகச் செயலாளர் பழனி சரவணன் உள்ளிட்ட அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Leave a Reply