வெட்டிய மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நட்ட ”நீர் துளிகள் இயக்கம்”

Share Button
”நடந்து முடிந்ததை மாற்ற முடியாது – ஆனால் புதிதாக உருவாக்க முடியும்” நீர் துளிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் பேச்சு :
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பெருமாள் சிலையை அவ்வழியாகக் கொண்டு செல்லும்போது தடையாக இருந்து மரங்களின் கிளைகள் மற்றும் ஒருசில மரங்களை வெட்டி வீழ்த்தப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை சாலையை விரிவாக்கம் செய்வதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரூ.65 கோடி செலவில் திட்டம் ஒன்றை அறிவித்தார். இதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை கிரிவலப்பாதையை அகலப்படுத்துவதற்காக நேரில் சென்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் கிரிவலப்பாதையில் உள்ள மரங்கள் மற்றும் செடிகளை வெட்டினர். மரங்களை வெட்டக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் திருவண்ணாமலை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து தேசிய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து மரம் வெட்ட தடைவித்தது.
பலகட்ட விசாரணைக்குப் பிறகு மரங்களை வெட்டாமல் பாதையை விரிவாக்கம் செய்யலாம் என்று கூறியது. பிறகு மரங்களை வெட்டாமல் பாதையை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் கிரிவலப்பாதை வழியாக பெருமாள் சிலையைக் கொண்டு செல்லப்பட்டது. அப்போதுதான் மரங்களை வெட்டி சாய்க்கப்பட்டது.
ஒரு சிலைக்காக பழமைவாய்ந்த பல மரங்களை வெட்டியது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது என்று சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. நடந்து முடிந்ததை மாற்ற முடியாது, ஆனால் புதிதாக உருவாக்க முடியும் என்று களத்தில் இறங்கியது நீர் துளிகள் இயக்கத்தின் அமைப்பினர்கள்.
கோதண்டராமர் இடித்து  விட்டார் மரங்கள் விழுந்து விட்டது என்று இரண்டு நாட்களாக முகநூல்  மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக செய்திகள் பரவி, பல நூறு பதிவுகளை பார்க்க நேர்ந்தது. ஆனால் அதே இடங்களிலும் கிரிவலப்பாதையில் மரங்கள் நடப்போகிறோம் இயன்றவர்கள் வாருங்கள் தங்களுடைய ஆதரவைத் தாருங்கள் என்று நேற்று ஒரு பதிவிட்டுவிட்டு களப்பணியில் இறங்கினார்கள் நீர்த் துளி இயக்கத்தினர்கள்.
இப்பதிவைக் கண்ட சமூக அக்கறையுள்ளவர்கள் ஒருசிலர் வந்தனர். “நீர் துளிகள் இயக்கத்தின்“ நண்பர்கள் நெடுஞ்சாலைத்துறை உதவியுடனும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடனும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 75 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வைத்து, அதற்குப் பாதுகாப்பு வளையமும் வைத்தார்கள்.
ஏற்கனவே கடந்த வருடம் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் தண்ணீரின்றி வாடி இருந்தது அனைத்துக்கும் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர் நீர் துளி இயக்க ஒருங்கிணைப்பாளர்களான ராகவன், நீலகண்டன், மருது, திருவேல் மற்றும் இயக்கத்தில் உள்ள பல நண்பர்கள். இதனைத் தொடர்ந்து அடுத்த மழைக்காலம் வரை தண்ணீர் ஊற்றவும் உள்ளோம் என்றனர்.
வெறும் வார்த்தைகளால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது களத்தில் பணியாற்றினால் மட்டுமே மாற்றம் என்பது நிகழும், மாற்றம் என்பது சொல்லல்ல செயல் -இன்றும் என்றும் களப்பணியில் எங்கள் நீர் துளி இயக்கம் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள் இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *