கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காவல்துறை சார்பில்  இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

Share Button
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 22.12. 2018 காவல்துறை சார்பில்  இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கிருட்டினகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய. திரு. மகேஷ் குமார் அவர்கள் தலைமையில், கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு. கண்ணன் முன்னிலை வகித்தார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு. மோகன் ராஜ் தலைமை தாங்கினார்.
மருத்துவ முகாமினை மருத்துவத்துறை இணை இயக்குநர். மருத்துவர் திரு. அசோக்குமார் அவர்கள் துவக்கினார் முகாம் ஒருங்கிணைப்பாளராக நுகர்வோர் விழிப்புணர்வு நலச்சங்கத்தின் மாநில தலைவர் ஏ. ஜி.ஜாய் அவர்கள் கலந்து கொண்டனர்.
தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகள் ஒருங்கிணைத்த  காவல்துறை, அந்த பகுதியில் மக்கள் நல்லுறவுக்கான இந்த  முகாமின்போது,  முந்தைய நாட்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு நினைவு பரிசு ரொக்கம் வழங்கி ஊக்குவித்தனர்.
மேலும் முகாமில், ஏழை எளிய மூத்த குடிமக்களுக்கு குளிரின் கடுமை உணர்ந்து 100 மேற்பட்ட தரமான கம்பளி போர்வையை இலவசமாக வழங்கிப்பட்டது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *