முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா: ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
தூத்துக்குடி:-

முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான பொன் காந்திமதிநாதன் தலைமையில் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் 52வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் உள்ள அன்பு உள்ளங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 300 பேருக்கு, எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான பொன் காந்திமதிநாதன் தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிமுருகன், மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் விஜயமுத்து, கிரி, செந்தில், சுரேஷ், ராமச்சந்திரன், முத்துரவி, கோவிந்தன், மாடசாமி, ஏரல் நகர இளைஞரணி செயலாளர் சுபைர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











