தாய்த் தந்தையரின் பாசமா அல்லது ஆண்ட்ராய்டு போன் அரக்கனின் மோகமா!
திருப்பூர் :-
தாய்த் தந்தையரின் பாசமா அல்லது ஆண்ட்ராய்டு போன் அரக்கனின் மோகமா ?
ஆண்ட்ராய்டு போனின் அட்டகாசம் தாங்க முடியலடா சாமி…
“நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை” மற்றும் “திருப்பூர் நிழல் அறக்கட்டளையின்” விழிப்புணர்வு பதிவு…
மழலைகளின் மனதை மாற்றி வரும் மந்திரப் போன்… இப்போது இருக்கிற ஆண்ட்ராய்டு போன். நாளைய எதிர் காலம் என்னவாகப் போகுதேன்னு தெரியாமல் தடுமாறும் பெற்றோர்கள். இன்று பல வீடுகளில் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை செல்போன் அரக்கனால் சிக்கி சின்னாபின்னமாக நிலைமை தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
காலம் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறதோ?
அனைத்துத் தரப்பினரும், அனைத்து வயதினரும் என, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தொடர்ந்து, அலுவலகங்களுக்கு பஸ்களிலும் ரயில்களிலும் செல்லும் பொதுமக்கள் என அனைவரும் இந்த செல்போன் அரக்கனிடம் சிக்கியும், மூழ்கியும் வருவதால் அனைவரது மனங்களும் குனங்களும் தடுமாறி, பாதை மாறி செல்லும் நிலை அதிகமாக இப்போது நிலவுகிறது.
பெற்ற தாய்த் தந்தையரின் பாசத்தை மறந்தும், ஒற்றுமை இழந்தும், உறவு முறை இழந்தும், வளர வளர தனக்குள் ஒரு ஆழமான பிரிவினையை உண்டாக்கிடும் போக்குதான் தற்போது உள்ளது.
இன்றைய தீராத மொபைல் மோகத்தால் பலரும் பல்வேறு வகையில் தவறான பாதைக்கு செல்ல நேரிடுகிறது. உறவு முறைகளில் விரிசல் ஏற்படுகிறது. கணவன் மனைவிக்குள்ளே கருத்து வேறுபாடுகள் உண்டாகி பிரிந்து வாழ்கின்றனர். தந்தை ஒரு பக்கம் தாய் ஒரு பக்கம் பிள்ளைகள் ஒரு பக்கம் என பாசத்திற்கு ஏங்குகிறார்கள்.
ஆண்ட்ராய்டு போன் இல்லை என்றால் நான் இல்லை
ஆண்ட்ராய்டு போன் இல்லை என்றால் நான் இல்லை என்ற நிலைமைதான் இப்போது அதிகமாக இருக்கிறது. நல்லதுக்கு நல்லதுமாகி… கெட்டதுக்கு கெட்துமாகி இருக்கின்ற இவ்வுலகில் நம் குழந்தைகளை நாம் தான் முறைபடுத்தி, சீர்படுத்தி, நல்வழி காட்டி வளர்க்கப்பட வேண்டும்..
வளரிளம் பருவமே உஷார்
இன்று பெரும்பாலான குழந்தைகள் காலை பள்ளிக்கு செல்லும் முன்பு மொபைல் பார்ப்பதும், மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் மொபைல் பார்பதுமாகவே ஒரு பெரிய வேலையாகவே இருக்கிறார்கள்.
இதில் நிறைய குழந்தைகள் மொபைலில் டிவி பார்த்துக் கொண்டே தான் சாப்பிடுவார்கள். இதனை ஆரம்ப காலகட்டத்திலையே வீட்டில் இருப்போர் தடுத்து நிறுத்தி சரியான வழியைக் காட்டினால் தான் நாளைய தலைமுறையிரை காப்பாற்றிட முடியும்.
பள்ளி செல்லும் குழந்தைகள் கைகளில் செல்போனை கொடுப்பதைவிட, எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் கைகளில் தன்னம்பிக்கை எனும் மந்திரத்தை தவழச் செய்து, கல்வியெனும் பாட நூலை கொடுங்கள். நன்றாக படிக்க வையுங்கள். கல்வியறிவு புகட்டுங்கள்.
வாழ்வின் எதிர்கால நலன்களை கெடுக்கும் மொபைலைக் கொடுத்து மழலைகளின் மனங்களை சீரழித்துவிடாதீகள். இனி வரும் காலம் என்னவாகுமோ என்ற அச்சமும் தற்போது எழுந்துள்ளது.
இது ஒரு மழலைகளின் எதிர்கால நலன் காக்கும் விழிப்புணர்வு பதிவிற்காக திருப்பூரில் இருந்து போத்தம்பாளையம் பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர் ந. தெய்வராஜ். செல் : 9442372611 / 8667789076.
Leave a Reply