புதுக்கோட்டையில் காமராஜ் வித்யாலயா‌ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி ஆண்டு விழா

Share Button

புதுக்கோட்டை காமராஜ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் காமராஜ் வித்யாலயா‌ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி ஆண்டு விழா புதுக்கோட்டை சத்யா மஹாலில் நடைபெற்றது.

விழாவில், பள்ளி தாளாளர் ரவீந்திரன், டாக்டர். தினேஷ் காமராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் ஷீலாதேவி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர் கராத்தே, சிலம்பம், ஜிம்னாஸ்டிக், நடனம், செஸ் போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

விழாவில், டாக்டர் சண்முக பிரியா, புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவருமான பீட்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினர்.

மேலும், மழலையர் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் பசுங்கனி, ரம்யா கிருஷ்ணன், கண்மணி, சசிகலா, இசக்கிதுரைச்சி, கவிமணி, பொன்இசக்கி, சதிக்க்ஷா மற்றும் கராத்தே மாஸ்டர் சண்முகநாராயணன், ஜிம்னாஸ்டிக் மாஸ்டர் சுபாஷ் விஷ்ணுகுமார், செஸ் மாஸ்டர் புஷ்பகுமார், நடன மாஸ்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *