சென்னை டாக்டர் அம்பேத்கர் இண்டல்லக்சுவல் சொசைட்டி சார்பில் மகளிர் தின விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சென்னை :-
சென்னை டாக்டர் அம்பேத்கர் இண்டல்லக்சுவல் சொசைட்டி சார்பில் மகளிர் தின விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் 50 தொகுதிகளாக “அம்பேத்கரியம் – ஜெய்பீம் 2.0” என்னும் கருத்தியலில் அழகு மிளிரும் வண்ணம் தமிழ் உலகிற்குத் தந்த வரலாற்றுச் சாதனைக்காக தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் கௌதம சன்னா அவர்களுக்கு “பீம் – இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதும்,
ஆராய்ச்சிகள் பல செய்து தமிழுக்கு தொண்டாற்றியவரும், தமிழ்நாட்டில் பௌத்த வேர்களை கண்டறிந்து ஆவணப்படுத்தியவரும்
தமிழ்நாட்டு கோவில்களில்
புத்த சிலைகளை அடையாளம் கண்டு நூல்கள் இயற்றியவருமான தமிழ்-பௌத்த ஆராய்ச்சியாளர், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் முனைவர் க.சுபாஷிணி அவர்களுக்கு அவரது சீரிய பணிகளைப் பாராட்டி “தமிழ்-பௌத்த ஆய்வுப் பேரொளி விருதும்,
முனைவர் கௌதம சன்னா அவர்களின் சீரிய தலைமையில், அம்பேத்கரியம் நூல் குழுவில்
ஒருங்கிணைந்து செயலாற்றி, வடிவிலும் கருத்திலும் மாண்புறச் பங்களிப்பு செய்து
வரலாற்றில் முத்திரை பதித்துள்ள தம்மமித்திரர் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை விஹார் கவுன்சில் பொருளாளர் அரக்கோணம் கோவி.பார்த்திபன் அவர்களுக்கு “பீம் ரத்னா ஆளுமை திறன் மேம்பாட்டு விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்கள்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விழாவில் பங்கேற்ற ஐ.சி.எஃப். உயர் அதிகாரிகள் பி.சிவராமன், பரிமளக்குமார், அகில இந்திய இந்தியன் வங்கி எஸ்.சி/எஸ்.டி நலச்சங்க தலைவர் பரத்பத்மநாபன் ஆகியோரின் உரைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
விருதுகள் பெற்ற ஆளுமைகளின் பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து சிறப்பான வாழ்த்து குறிப்புகளை டாக்டர் அம்பேத்கர் இண்டல்லக்சுவல் சொசைட்டியின் பொது செயலாளர் ஆ.கா.தனகுமார் அவர்களால் வாசிக்கப்பட்டது. தலைவர் எஸ்.சிவராஜ் அனைவரையும் வரவேற்று பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
எம்.தனசாமி வினாடி வினா போட்டியை நடத்தினார். நிர்வாகிகள் கோபிநாத், ஆர்.எழிலரசன், ந.அன்பு, கிஷோர்குமார், திருமதி.ஜோதி உதயரவி, ஜெயக்குமார், உ.கிருஷ்ணகுமார், பாஸ்கரன், ரமேஷ், ராஜா மற்றும் ஏராளமான பெண் நிர்வாகிகள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
“பெண்கள் முன்னேற்றத்தில் டாக்டர் அம்பேத்கரின் பங்கு” – என்னும் தலைப்பில் கட்டுரை, பேச்சு போட்டி, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மகப்பேறு கால விடுப்பு முதல் சொத்துரிமை வரை பெண்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் பெற்றுத் தந்த உரிமைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
வெறும் கொண்டாட்டமாக மட்டுமில்லாமல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார சுதந்திரம் குறித்த ஒரு அறிவுப்பூர்வமான விழிப்புணர்வு நிகழ்வாகவும், “பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கொண்டே ஒரு சமூகத்தின் வளர்ச்சியை நான் அளவிடுகிறேன்” என்ற டாக்டர் அம்பேத்கரின் வரிகளுக்கேற்ப, சாதி மற்றும் பாலின பேதமற்ற ஒரு சமத்துவச் சமுதாயத்தை நோக்கிப் பயணிப்பதற்கான ஒரு உந்துதலாக இந்த விழா திகழ்கிறது என பேசினர்.
இறுதியாக டாக்டர் அம்பேத்கர் இன்டல்லக்சுவல் சொசைட்டி பொருளாளர் குருசாமி நன்றி கூறினார்.











Leave a Reply