தமிழ்நாடு முழுவதும் ஞாயிறு முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது
தமிழ்நாடு முழுவதும் ஞாயிறு முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது
நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்றின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு கருதி தமிழ்நாடு முழுவதும் ஞாயிறு முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
ஒமிக்கிரான் பாதிப்பு அதிகரிப்பு
ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் படிப்படியாக ஒமிக்கிரானின் தொற்று உயர்ந்து வருகிறது.
கடந்த 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், ஞாயிறு ஊரடங்கு இன்று ஒருநாள் முழுவதும் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து பொதுப்போக்குவரத்து, மெட்ரோ ரெயில் ஆகியவை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்த ரெயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி உண்டு. ஆனால் போலீசாரின் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மருத்துவத்துறையும், காவல்துறையும் கேட்டுக்கொள்ளனர்.
சென்னையின் முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.












Leave a Reply