பிக்பாஸ் சீசன் 5 ல் பங்கேற்க இருக்கும் பிரபலங்கள் யார்?
பிக் பாஸ் சீசன் 5
ரசிகர் மத்தியில் மிகவும் பிரச்சிப்பெற்ற ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக மிகவும் ஹிட்டாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 ஆவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார்.
பெரிதும் மக்களால் பார்க்கப்படும் பிக் பாஸ் சீசன் 5 ல் பில முக்கிய பிரபலங்கள் பெயர்கள் வெகுவாக பேசப்படுகிறது. இந்த சீசனுக்கான ப்ரோமோ அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த ப்ரோமோவும் ஒரு வித்தியாசமான கோணத்தில் வெளியிடப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிக்பாஸ் சீசனுக்கும், புத்தம் புதிதாய் லோகோ ஒன்று தயாரிக்கப்படும். அதே போல இந்த ஆண்டும் பிக்பாஸ் லோகோவை அதிகாரப்பூர்வமான வெளியிட்டுள்ளனர். இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் அந்த பிரபலங்கள்?
பிக் பாஸ் ஷோவில் கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பலவிதமான சுவாரஸ்யமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதற்கான பதில் கிடைத்துவிடும். இதனிடையே போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதில், குக் வித் கோமாளியில் பங்கேற்ற கனி, சுனிதா, பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் அவரது மகள் ஆகியோரது பெயர்கள் அடிபடுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ஜிபி முத்து, செய்தி வாசிப்பாளர் கண்மணி, விஜய் டிவி தொகுப்பாப்பார் விஜே பப்பு, தொகுப்பாளினி பிரியங்கா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக விரைவில் விஜய் தொலைக்காட்சியில் வெளியாக இருக்கும் இந்த பிக் பாஸ் சீசன் 5 அனைவராலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் ரசிகர் பெருமக்கள்.
Leave a Reply