பொது கழிப்பிடமா? இலவச மது அருந்தும் மையமா? – கட்டி முடிக்கப்பட்ட கழிவறை எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்
திருப்பூர் :-
கட்டி முடிக்கப்பட்ட கழிவறை எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்?
கட்டி முடிக்கப்பட்ட கழிவறை எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்? வருடக்கணக்கில் காத்திருப்பு…!
பொது கழிப்பிடமா? இலவச மது அருந்தும் மையமா?
அதிகாரிகள் துரித நடிவடிக்கை உடனடியாக எடுப்பார்களா?
திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட செட்டிபாளையம் பஞ்சாயத்து, ஆத்துப்பாளையம் அம்பேத்கார் நகர் அருகில் உள்ள கழிவறை மேலே உள்ள படத்தில் காணலாம். கட்டி முடிக்கப்பட்ட பொது கழிவறை எப்போது பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என பலரும் எதிர்பார்த்துவரும் வேளையில், அங்கு மது பிரியர்களின் இலவச மது அருந்தும் மையமாக மாறியுள்ளது.
கட்டி முடித்த கழிவறை… அப்பகுதியில் வாழும் மதுப்பிரியர்களின் பொழுது போக்கும் பாராக பயன் படுத்திடும் அவல நிலை…?
திருப்பூர் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளின் பார்வைக்கு தெரிந்திருக்குமா… தெரியாதா… ஏன் இந்த கழிவறை கட்டி முடிக்கப்பட்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராததற்கான கால அவகாசம் ஏன்…?
மக்களின் கேள்விகள்…? இப்பகுதியில் வாழும் எங்களுடைய வீடுகளில் போதுமான கட்டிட கழிப்பிட வசதியில்லாத சூழலில் சிக்கித்தவிக்கும் எங்களது சுகாதார நலனை பேணிக்காக்கும் விதமாக இப்பகுதியில் இந்த கழிப்பிடமானது கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் கட்டியது மட்டும்தான் ஆனால் அக்கழிப்பிடம் இன்று வரையில் திறக்கப்படாமலேயே உள்ளது. இக்கழிவறையானது பாதுகாப்பின்மையில்லாமல் அக்கழிவறைகளின் கதவுகள் யாவும் உடைக்கப்பட்டும், உள்ளே கழிவறை ஃபேசன் உடைப்பு ஏற்பட்டும், முற்செடிகள் வளர்ந்தும் அங்கு விச ஜந்துகள் வாழும் கூடாரமாகவும், பகல் இரவென்று பார்க்காமல் அருகில் இருக்கும் மதுபானக் கடையில் வாங்கி வரும் மதுப்பிரியர்கள் அங்கே கழிவறை ரூமில் கூட்ட கூட்டமாய் அமர்ந்து மதுக்குடிக்கும் பாராக பயன்படுத்தி மதுபான பாட்டில்களை கழிவறை ரூம்களில் உள்ள சுவற்றில் வீசி எறிவதனால் பாட்டில்கள் உடைந்து தெரித்து வழித்தடங்களில் கண்ணாடி சிதறல்களால் அப்பகுதிவழியே பொதுமக்கள் குழந்தைகள் நடமாடமுடியாமல் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் அவல நிலைகள் தான் இப்பகுதியில் நடைபெற்று வருகின்றது.
இன்று வரை திறக்காதது ஏன்? மக்கள் அவதி…
கடந்த 3 வருடகளுக்கு மேலாக பொதுமக்களாகிய நாங்கள் பள்ளி செல்லும் குழ்ந்தைகள், கல்லூரி செல்லும் குழந்தைகள், தொழில் நிர்வாகங்களுக்கு செல்லும் போதும் நாங்கள் இந்த இடத்தை கடக்கும்போது பெரும் ஆசாதார சூழல் நிலவும் என பயத்தில் கடந்து செல்கின்றோம். ஒருவித பதற்றமும் பயமும் நாளுக்குநாள் தொடர்கதையாகிவிட்டது…
இந்த கழிவறையானது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருமா வராதா… திருப்பூர் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளாகிய தாங்கள் எங்களின் நீண்ட கால மனக்குமரல்களை சரிபடுத்தி இக்கழிவறையை திறந்து எங்களின் அவசரகால நலனில் விடுதலை தரக்கோரிக்கையாக கேட்கின்றோம்.
கட்டியது கழிவறை தான் என தினம் தினம் பார்த்து விட்டு திறப்பது எப்போது என ஏங்கிடும் எங்கள் பொதுமக்களின் பார்வை… எங்களின் வரிப்பணம்… அரசின் தேவைக்கு எப்படி முக்கியமோ… அதே அரசின் திட்டமானது பொதுமக்களின் அத்யாவசிய நலனுக்கான இந்த கழிவறை திட்டமானது கட்டிய உடன் எங்கள் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்திட வழிவகுத்திடுவது தானுங்க அதிகாரிகளின் கடமை.
ஆனால் இதற்கான வழிகாட்டுதலே இல்லாமல் இக்கழிவறை கட்டி 3 வருடங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கே இல்லாமால் இருக்கும் கழிவறைக்கு மின் இனைப்பும் உண்டு. இதனை தவறான வழிகளில் ஒரு சில விசமிகள் பயன்படுத்துவதை தடுத்து பாதுகாப்பளிக்கவும் இக்கழிவறையை இனியாவது ஆத்துப்பாளையம் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்பட வழிவகுத்தால் இந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
அனைத்து பொதுமக்களில் நானும் ஒருவர் என்கின்ற முறையில் சமூக உணர்வோடு…
ந. தெய்வராஜ், (சமூக ஆர்வலர்)
ஆத்துப்பாளையம், திருப்பூர்.
Leave a Reply