இந்திய திரைப்பட விழாவில் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிப்பு

Share Button

சிறந்த நடிகருக்கான பெஸ்ட் ஆக்டர் அவார்டு சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் மூலம் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. சூர்யாவிற்கே உரித்தான இயல்பான நடிப்பில் கலக்கியிருப்பார் சூர்யா. இந்தப் படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்திருந்தார் என்பது மேலதிகமான தகவல்.

குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் என்ற கொள்கைக்கு உயிர்கொடுத்த ஏர் டெக்கான் நிறுவன தலைவர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறுதான் படமாக சூரரைப் போற்று உருவாகியிருந்தது.

இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் சூர்யா நடித்த வெளியான சூரரைப் போற்று படம் திரையிடப்பட்டது. நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சிறந்த படத்துக்கான விருதும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் அமோக வரவேற்பை பெற்ற நடிகர் சூர்யா நல்ல கதையம்சம் கொண்ட படங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.