ஓம் நமோ வாராஹி : இதுவரை இல்லையென்றால் இனி நடக்கும் – வினைகள் தீரும் வியாழன் யாகம்!
” இதுவரை இல்லையென்றால் இனி நடக்கும் – வினைகள் தீரும் வியாழன் யாகம் “
லட்சக்கணக்குல முதல் போட்டும் வியாபாரத்துல நஷ்டம் மேல நஷ்டம் என்று ஒருவர் . வியாபாரம் எல்லாம் நல்லாத்தான் நடக்குதுங்க ஆனா ஏனோ நிம்மதியே இல்லங்க குடும்பத்துல. வீட்டுல யாராவது ஒருத்தருக்கு மாத்தி மாத்தி உடம்புக்கு முடியாம போகுது. எந்நேரமும் ஆஸ்பத்திரி வாசல்லயே தவம் இருக்க வேண்டியிருக்குது என்றொருவர்.
அட பணம் தேவையான அளவுக்கு இருக்குது, ஆரோக்கியத்திற்கும் குறைவில்ல ஆனா பாருங்க பொண்ணுக்கு வரன் செட் ஆகல, வயசாகிட்டே போகுது என்றொருவர். பையனுக்கு நிரந்தர வேலை இல்லை, கல்யாணமும் தள்ளிப்போய்க்கிட்டே இருக்கு என்றும் , கல்யாணம் ஆகி வருஷம் தான் ஓடிக்கிட்டிருக்கு. புத்திர பாக்யம் கிட்டவே இல்லை.
ஏறாத ஆஸ்பிட்டல் இல்ல. பார்க்காத மருத்துவம் இல்லை. இது போக போகாத கோயில் குளம் இல்லை. பண்ணாத பரிகாரம் இல்லை. ஒன்னுமே முன்னேற்றம இல்லை என்று ஒரு பக்கம், எனக்கு நினைவு தெரிஞ்சு யாருக்கும் எந்த பாவமும் பண்ணலீங்க. ஆனா என் மூணு வயசு குழந்தைக்கு கேன்சர்.
இந்த பிஞ்சு வயசுல அது படற கஷ்டம் பார்க்க சகிக்கல என்றும், இந்த மானிட பிறவிக்குத்தான் எத்தனை எத்தனை சோதனைகள், வலிகள் , வேதனைகள்… சரி இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன? என்று அலசி ஆராய்ந்து பார்த்தால் அது கர்மவினை என்கிற ஒற்றை புள்ளியில் போய் நிற்கிறது.
முற்பிறவியிலோ அல்லது எந்த பிறவியிலோ நாம் செய்த பாவங்களே கர்மவினையாக மாறி நம்மை அலைகழிக்கிறது என்கிற உண்மை உணர்த்தப்பட்ட பின்னும் அதற்காக சிறு பூஜைகள், பரிகாரங்கள் என செய்தும் பார்த்து விட்டோம். ஆனாலும் பலனில்லை . இதற்கு என்ன தான் தீர்வு . நம்மை பிடித்து உலுக்கும் கர்மவினையை எப்படி கடப்பது என்று தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரே ஆறுதலும், அடைக்கலமும் “அன்னை வாராஹி” மட்டுமே.
பன்றி முகம் கொண்டிருந்தாலும் கருணையின் ஒட்டுமொத்த உருவம் அவள். முப்பெரும் தேவியரின் ஒட்டு மொத்த சக்தியாக த்ரீசக்தி தேவியாக விளங்கும் அன்னை வாராஹிக்கு மட்டுமே இந்த கலியுகத்தில் நாம் அனுபவிக்கும் அவஸ்தைகளுக்கு காரணமான கர்மவினையை போக்கும் வல்லமை இருக்கிறது. அவளுக்கு மட்டுமே இந்த சக்தி அளிக்கப்பட்டிருக்கிறது.
சரி வாராஹியை எப்படி வழிபடுவது. என் வேதனை குரல் அவளுக்கு எப்படி எட்டும். என்று திக்கற்று இருப்பவர்களுக்கு வழி காட்டுகிறது வியாழன் யாகம்.
நாம் வேண்டுகிற தெய்வத்தை நம் பக்கம் பார்க்க வைக்கவும் , நம் வேண்டுதல்கள் , கோரிக்கைகள் நிறைவேறவும் ரிஷிகள் கண்டுபிடித்த எளிய வழி தான் யாகவேள்வி. எந்த தெய்வத்தை வேண்டி மந்திரங்களை உச்சரித்து வேள்வியில் அவர்களுக்கு அவிற்பாகம் என்று சொல்லப்படும் ஆகுதியை சமர்ப்பித்தால் அந்த தெய்வங்கள் யாக குண்டத்தில் உண்டாகும் அக்னியில் தோன்றி தங்களுக்கான அவிற்பாகத்தை பெற்றுக்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அவர்களுக்கான கட்டளை.
தனது சீரிய தவ வாழ்வின் மூலம் இந்த உண்மையை கண்டுணர்ந்து நித்தமும் அன்னை வாராஹிக்கு யாக வேள்வி நடத்தி வரும் ‘ யாகரிஷி ‘, அன்னை த்ரீசக்தி வாராஹியின் அருள் மைந்தன், நித்ய அக்னிஹோத்ரி, ”வராஹ குருஜி “ அவர்கள் , தனது யாக வேள்வியில் வாரந்தோறும் வியாழன் அன்று மக்களின் துயர் துடைக்க ” காட்பாடி கோபாலபுரம் ஸ்ரீ த்ரீசக்தி வாராஹி பீடத்தில் பொது யாகம் நடத்தி வருகிறார்.
இந்த யாகத்தில் கலந்து கொண்டவர்களில், இனி வாழ்க்கையே இல்லை என்று வந்தவர்களுக்கு , வாழ்க்கை முழுவதும் வழித்துணையாய் வாராஹி இருப்பாள் என்ற நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. இன்னொரு புறம் தீராத நோய்கள் எல்லாம் தீர்ந்திருக்கிறது என்ற உணமைகளை எழுத்தில் படிக்காமல் ஒரு முறை யாகத்தில் கலந்து கொண்டு அன்னை வாராஹியின் பாதத்தை பற்றிக்கொண்டால் என்ன நடக்கிறது என்பதை நேரில் தெரிந்து கொள்ளலாம்.
காலை எட்டரை மணிக்கு யாகத்தின் முதல் நிகழ்வாக ” வராக குருஜி ” அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அன்னை த்ரீசக்தி வாராஹிக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே பால் அல்லது மஞ்சளால் அபிஷேகம் செய்யலாம். அப்பொழுதே நம் வேதனையை அன்னையிடம் சொல்லி நம் கோரிக்கையை அவள் பாதங்களில் சமர்ப்பித்து விடலாம்.
அபிஷேகம் முடிந்த பிறகு கணபதி பூஜை, நவகிரக பூஜை, என யாகம் தொடங்கும். நம் காரியங்கள் நிறைவேற காரியசித்தி மந்திரம் சொல்லப்படும். இந்த மந்திரம் மிக எளிது. முடிந்தால் நாமும் மந்திரம் சொல்லலாம். முடியாவிட்டால் மற்றவர்கள் சொல்வதை கேட்டு அன்னையிடம் நம் வேண்டுதல்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
இதற்குள் அங்கிருக்கும் ஒவ்வொருவரின் கைகளுக்கும் யாகவேள்வியில் சமர்ப்பிக்க வேண்டிய ஆகுதி பொருள் வந்து சேர்ந்திருக்கும். பின்னர் அன்னை த்ரீசக்தி வாராஹிக்கான மூல மந்திரம் சொல்லப்படும் போது பக்தர்கள் தங்களிடம் இருக்கும் ஆகுதியை தங்கள் கைகளாலேயே யாகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பக்தர்கள் அனைவரும் ஆகுதியை அளித்த பின்னர் “வராக குருஜி ” அவர்கள் வாராஹி மாலை அல்லது அம்பாள் ஆராதனை பாடல்கள் பாடி பூர்ணாகுதியை வேள்வியில் சமர்ப்பிப்பார்.
இதன் பின் தீர்த்தம் மற்றும் யாக ரக்ஷையும் அளிப்பதோடு யாகம் நிறைவு பெறும். சரி யாகத்திற்கு நாங்கள் என்ன கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிற பக்தர்களுக்கு… நீங்கள் எதையும் கொண்டு வரவேண்டாம்.
எத்தனையோ இடங்களுக்கு போய் வந்துட்டேன். பத்தோடு பதினொன்னு , அத்தோடு இதுவும் ஒன்னு என்று வராமல், இதுவரை இல்லையென்றாலும் இனி நடக்கும் என்ற நம்பிக்கையுடனும், தூய பக்தியுடனும் யாகத்தில் கலந்து கொண்டால் மாற்றம் என்ன என்பதை நீங்களே உணரலாம்.
சில சமயம் பக்தர்களின் பிரச்சினைக்கேற்ப காலை எட்டரை மணிக்கு ஆரம்பிக்கும் யாக நிகழ்வு முடிய மதியம் இரண்டு மணி கூட ஆகலாம். அதனால் பொறுமை அவசியம். யாகம் நடக்கும் நேரத்தில் ஏதோ ஒரு கணத்தில் அன்னை த்ரீசக்தி வாராஹி யாக அக்னியில் பிரசன்னமாவாள். தன்னை நம்பி வந்த பக்தர்களின் துயர் துடைக்க அவர்களை பரிவுடன் உற்று நோக்குவாள். அந்த ஒரு கணத்தில் ஏழேழ் பிறவியிலும் நாம் செய்த பாவங்கள் நீங்கி நமது கர்மவினைகள் அகன்று நல்லதொரு வாழ்வு கிட்டும்.
வாராஹியை வணங்குங்கள். வாழ்க்கை முழுவதும் வழித்துணையாய் அவள் வருவாள். வினைகள் தீரும் வியாழன் யாகத்தில் பங்கு பெறுங்கள். அன்னையின் அருளை பெறுங்கள். ” ஓம் நமோ வாராஹி “
டி.தணிகைவேல்
Leave a Reply