தன்னந்தனிமையிலே தவிக்கிறேனே யுகமாய் உனக்காக! – கவிதை : கவிதாயினி ரேணுகா சுந்தரம்

Share Button
தன்னந்தனிமையிலே
தவிக்கிறேனே
யுகமாய்
உனக்காக!
இரவும்
முடிந்திடுமோ
பொழுதும் 
விடிந்திடுமோ
என்றெனக்கு
அச்சமில்லை !
தொடங்கியக்காதல்
முடிந்திடுமோ
கட்டியக்கனவு
கோட்டைகளும்
இடிந்திடுமோ
என்றே
அச்சம்
என்னைக்
கொல்கிறது!
கொடிது
கொடிது
தனிமை
கொடிது
அதனிலும்
கொடிது
இளமையில்
தனிமை
தனிமையை
நீக்கிட
காதலனே
வந்திடிங்கு! 
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

2 responses to “தன்னந்தனிமையிலே தவிக்கிறேனே யுகமாய் உனக்காக! – கவிதை : கவிதாயினி ரேணுகா சுந்தரம்”

  1. ரேணுகா சுந்தரம் says:

    மிக சிறப்பு

  2. Kaa Na Kalyanasundaram says:

    சிறப்பு. வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *