ராஜஸ்தான் மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகள் : 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு!

Share Button
ராஜஸ்தானில் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு வரும் 29, மே 6 தேதிகளில் 2 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 13 தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு மாநிலத்தில் 25 தொகுதிகளுக்கான மொத்த வேட்பாளர்களின் பெயர்களையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே 19 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 6 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

இதன்படி தற்போது எம்எல்ஏவாக உள்ள கிருஷ்ண பூனியாவிற்கு ஜெய்ப்பூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் பாஜவை சேர்ந்த இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
இதேபோல் அஜ்மீர் தொகுதியில் தொழிலதிபர் ஜூன்ஜூன்வாலா, கங்காநகர் தொகுதியில் பரத்ராம்மேக்வால், ராஜ்சமந்த் தொகுதியில் தேவ்கினந்தன் மற்றும் பில்வாராவில் ராம்பால் ஷர்மா ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *