பள்ளி கல்வித் துறை கோடை விடுமுறையை அறிவித்தது : விடுமுறை 50 நாட்கள் என அறிவிப்பு
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி திறந்த அன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மக்களவை தேர்தல் காரணமாக பள்ளிகளுக்கு ஏப்ரல் 12ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுஇருந்தது. இந்த நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகள் முன்கூட்டியே முடிவதால் 50 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply