இதுவரை தேமுதிக சார்பாக 6க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மீண்டும் தேமுதிக தனது லோக்சபா கூட்டணி முடிவை எடுக்க ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதன்பின் அதிமுக தலைவர்களுடன் ஆலோசனை நடந்தது.
சென்னை ஹோட்டல் கிரவுன் பிளாசாவில் இறுதிக்கட்ட ஆலோசனை நடந்தது. இதில் இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஹோட்டல் கிரவுன் பிளாசா சென்றார். அவர் அங்கு அதிமுக தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்.
சுமார் 20 நிமிடம் இந்த ஆலோசனை நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முக்கிய அதிமுக நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். அதேபோல் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தேமுதிகவுக்கு அதிமுகவில் 4 தொகுதிகள் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடும் இழுபறிக்கு பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
Leave a Reply