புகையில்லா பொங்கல் மற்றும் தூய்மை காற்று வார விழிப்புணர்வு ஊர்வலம்

Share Button
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேருராட்சி சார்பாக புகையில்லா பொங்கல் மற்றும் தூய்மை காற்று வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர் மாதப்பன் கொடியசைத்து துவங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் கணேசன் தூய்மை காற்று வாரத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.
இந்த ஊர்வலம் ஆண்கள் பள்ளியில் தொடங்கி கல்லாவி ரோடு, ரவுண்டானா, பழையகடை வீதி, காவல் நிலையம் வழியாக ‘பழைய பொருட்களை எரிக்காதே, சுற்றுச்சூழலை கெடுக்காதே, நெகிழியை பயன்படுத்தாதே, செடிகளை நட்டு பராமரிப்பு செய் போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மாணவர்கள் கூறியபடி ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தில் ஆசிரியர்கள் பசுமைப்படை முத்துக்குமார், ஜேஆர்சி கணேசன், தேசிய மாணவர் படை பூமணி, சாரணர் இயக்கம் ஜெயசீலன், மணிவாசகம், பிரபு, நூலகர் மகாலிங்கம், பேருராட்சி சுகாதார மேற்பார்வையாளர் அப்துல் மாலிக், பணியாளர்கள் பழனி, இளங்கோவன் மற்றும் ஜேஆர்சி, பசுமைப்படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலபணித் திட்டம், சாரணர் இயக்க மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *