பத்து நிமிடங்களுக்குள் 500 முறை சர்வாங்க ஆசனா: சர்வதேச யோகா தினத்தில் பயிற்சியாளர் சாதனை

Share Button

தூத்துக்குடி:-

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஈஸி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைமை பயிற்சியாளர் இம்மானுவேல் தலைமையில் தூத்துக்குடி பி.எம்.ஓர்னலாஸ் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்ல மாணவர்கள் யோகாசன பயிற்சி செய்தனர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி லசால் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் யோகா பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சியில், தூத்துக்குடி ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைமை பயிற்சியாளர் இம்மானுவேல் தலைமையில், பயிற்சியாளர் மாரீஸ்வரன் முன்னிலையில் பி.எம்.ஓர்னலாஸ் ஆதரவற்றோர் இல்ல மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

தொடர்ந்து, மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல், மன வலிமையுடனும், உடல் வலிமையுடனும், விழிப்புணர்வுடன் வாழ, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் இம்மானுவேல் சர்வாங்க ஆசனா நிலையில் நின்றபடி கால்களை 500 முறை மேலும், கீழும் இயக்கி சாதனை படைத்தார். இதனை அவர் 9 நிமிடம் 53 வினாடிகளில் செய்து அசத்தினார்.

தூத்துக்குடி ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கராத்தே, சிலம்பம், தடகளம், யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சி பெற்று வருகிறார்கள்.மேலும் இங்கு பயிற்சி பெற்ற பலர் காவல்துறை, ராணுவம் மற்றும் அரசு துறைகளில் பணிவாய்ப்பு பெற்று சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.