தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்: சங்க தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி:-

தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் வரும் ஜூலை 9ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறவிருக்கும் தங்கள் இல்லத்திருமணவிழாவில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்றது.
இதில், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட கௌரவ தலைவர் சோலையப்பராஜா, தெற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர், வடக்கு மாவட்ட தலைவர் வெற்றிராஜன், கோவில்பட்டி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தூத்துக்குடி மாணிக்க மஹாலில் வரும் ஜூலை 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா இல்லத்திருமண விழாவில் தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும், திருமண விழாவில் கலந்து கொள்ள வரும் வியாபார பெருமக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளித்து, உபசரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இதில், தங்கள் இல்லத்திருமணவிழாவில் வியாபார பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருளாளர் மாரிமுத்து, கோவில்பட்டி மாவட்ட பொருளாளர் மாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புராஜ், வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க செயலாளர் செந்தில்குமார், மாவட்ட முன்னாள் செயலாளர் மகேஸ்வரன், மாவட்ட முன்னாள் பொருளாளர் ஆனந்த் பொன்ராஜ், மகளிரணி ராஜம், துணைத்தலைவர் மாதவன், தூத்துக்குடி நகர பழைய இரும்பு மற்றும் மோட்டார் பார்ட்ஸ் வியாபாரிகள் சங்க செயலாளர்கள் செல்லத்துரை, பிரையன்ட்நகர் வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் மணிகண்டன், பிக்அப் தனபாலன், சுகன்யா செந்தில்குமார், தமிழ்ச்சாலை மேற்கு பகுதி வியாபாரிகள் நலச்சங்கம் புதுக்குடி-3வது மைல் தலைவர் ஜெயபாலன், செயலாளர் கே.மோகன்ராம், பொருளாளர் பொன்னம்பலம், துணைத்தலைவர் பெத்துபாண்டியன், புதுக்கோட்டை அனைத்து முன்னேற்றசங்க துணைத்தலைவர் என்.பெரியசாமி, அபிநயா ஜுவல்லர்ஸ் கிருஷ்ணமூர்த்தி, திருச்செந்தூர்ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் மகேஸ்வரன்சிங், சேதுபாதை ரோடு வியாபாரிகள் நலச்சங்கம் பொதுச்செயலாளர் அழகுமுத்து, செயலாளர் பழனி, ஞானசெல்வம், கூட்டுடன்காடு வியாபாரிகள் சங்க தலைவர் ஆதிநாராயணன், மாவட்ட செய்திதொடர்பாளர் அந்தோணி இன்பராஜ், விநியோகஸ்தர்நலச்சங்க அக்னிராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











