வாக்களிப்பவர்களை பல வகையினர்களாகப் பிரிக்கலாம்

Share Button

தேர்தல் 2026 :-

வாக்களிப்பவர்களை பல வகையினர்களாகப் பிரிக்கலாம்.

1. பாரம்பரியமாக தொடர்ந்து தனக்குப் பிடித்த கட்சிக்கே வாக்களிக்கும் எதனாலும் மாறாத வாக்கு வங்கி வாக்காளர்கள்.

2. கூட்டணியில் இருப்பவர்கள் யார், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று அலசி ஆராய்ந்து வாக்களிப்பவர்கள்.

3. வாக்குறுதிகள் அடிப்படையில் முடிவு செய்பவர்கள்.

4. எந்தக் கட்சியின் திட்டங்களால் பலன்கள் அனுபவிக்கிறார்களோ அந்தக் கட்சிக்கு நன்றிக் கடனுக்காக வாக்களிப்பவர்கள்.

5. வாக்குக்கு யார் பொருளோ பணமோ அதிகமாகத் தருகிறார்களோ.. அவர்களுக்கு வாக்களிப்பவர்கள்.

6. தன் தொகுதிக்கு என்ன செய்தார்கள், என்ன செய்யவில்லை என்று மட்டும் பார்த்து வாக்களிப்பவர்கள்.

7. வேட்பாளர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராய் இருந்தாலும் தன் ஜாதி, அல்லது மதத்தைச் சார்ந்தவராய் இருந்தால் அவருக்கு வாக்களிப்பவர்கள்.

8. தன் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் நம்பிக்கைக்கு உரியவராக நினைப்பவர்களுக்கு வாக்களிப்பவர்கள்.

9. ஒரு மாற்றத்தை விரும்பி புதிய கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள்.

10. எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை என்று தன் கோபத்தை வெளிப்படுத்த நோட்டாவுக்கு வாக்களிப்பவர்கள்.

இதில் நீங்கள் யார்?

2, 6, 8, 9 – இந்த நான்கு வகைகளில் ஒன்றில் நீங்கள் இருந்தால் நான் கை குலுக்கி மகிழ்வேன்.

மற்ற எந்த வகையில் நீங்கள் இருந்தாலும் அது அறம் நிறைந்த அரசியலுக்கு நல்லதில்லை.

வாக்களிப்பதற்காக வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் அவரவர் தொகுதிக்கு செலவு செய்து பயணித்து வந்து ஜனநாயக கடமை ஆற்றுகிறவர்களுக்கு என் சிறப்பு சல்யூட்.

– பட்டுக்கோட்டை பிரபாகர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *