தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வரும் 18ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 18ம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுவதால் தேர்தல் தேதியை மாற்றக்கோரி கிறிஸ்தவ அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பெரிய வியாழன் பண்டிகையை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Leave a Reply