குலையன்கரிசல் பகுதியில் புதிய ரேசன் கடை: அமைச்சர் மதன்ராஜா திறந்துவைத்தார்.
தூத்துக்குடி:-

குலையன்கரிசல் பகுதியில் புதிய ரேசன் கடை: அமைச்சர் மதன்ராஜா திறந்துவைத்தார்.
ஒட்டப்பிடாரம் தொகுதி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலையன்கரிசல் ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில், சிறுகுறுநடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா கலந்து கொண்டு புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார். பின்னர், குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி விற்பனையை அமைச்சர் மதன்ராஜா துவக்கிவைத்தார். முன்னதாக குலையன்கரிசல் பகுதியில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியின்போது, பொதுவிநியோகத்துறை துணைப்பதிவாளர் அ.சுப்புராஜ், கூட்டுறவு சார்பதிவாளர்கள் கே.பாலமுருகன், அ.சாம்டேனியல்ராஜ், தமிழக வெற்றிகழக தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கே.எம்.மகேந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் குழந்தைராஜா, மாவட்ட இணை அமைப்பாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சேதுராஜன் மற்றும் நிர்வாகிகள் ஜே.பி.ஆர்.பில்டர்ஸ் பரத், கூட்டாம்புளி ஜெயராஜ், சுரேஷ்கண்ணன், மாரீஸ்வரன், விக்னேஷ், சதீஷ், சரவணன், சுயம்புராஜ், தங்கம்மாள்புரம் கிளைசெயலாளர் பொன்சுந்தர், பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.











