அரசியலில் நடக்கும் சுவராஸ்யமான சம்பவங்களை திரைப்படங்களாக எடுக்கலாம், தனக்கு அரசியல் பிடிக்குமென பிரபல திரைப்பட நடிகர் பாகுபலி ராணா பேட்டி

Share Button
கோவை: அரசியலில் நடக்கும் சுவராஸ்யமான  சம்பவங்களை திரைப்படங்களாக எடுக்கலாம் என்பதால், தனக்கு அரசியல் பிடிக்குமென பிரபல திரைப்பட நடிகர் பாகுபலி ரானா தெரிவித்துள்ளார்.
கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள லங்கைன்ஸ் என்ற கடிகார விற்பனை நிலையத்தில், குவார்ட்ஸ் என்ற புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கடிகாரத்தை பிரபல திரைப்பட நடிகர் ரானா அறிமுகம் செய்தார்.
ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான கடிகாரத்தை அறிமுகம் செய்து வைத்த அவர் பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இயக்குநர் பிரபு சாலமான் இயக்கத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருவதாகவும், அப்படம் தமிழில் காடு என்ற பெயரில் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் நல்ல மாநில மொழிப்படங்களுக்கு நாடு முழுவதும் வரவேற்பு இருப்பதாகவும், இது சினிமாவிற்கு நல்ல நேரம் எனவும் அவர் கூறினார். ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் குறித்த திரைப்படத்தில் நடித்தது சிறப்பான அனுபமாக இருந்தது எனவும்,  மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நடிகர் ஆர்யா திருமணத்திற்கு வாழ்த்து கூறிய ரானா, தனக்கு தற்போதைக்கு திருமணம் இல்லை என்றார். அரசியலில் நடக்கும் சுவராஸ்யமாக சம்பவங்களை திரைப்படங்களாக எடுக்கலாம் என்பதால், தனக்கு அரசியல் பிடிக்குமெனவும், தற்போது அடுத்த படங்கள் குறித்து மட்டுமே நினைப்பதாகவும் கூறிய அவர், நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது தனிப்பட்ட ஆர்வம் எனவும் சுட்டிக்காட்டினார்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *