கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி மதகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள OUR LADY’S மேல் நிலைப் பள்ளியில் 239 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
உடன் தளி வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாச ரெட்டி, அவைத்தலைவர் கிரிஷ், மாவட்ட பிரதிநிதி குருவாரெட்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அசோக், வேணு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மல்லிகா அர்ஜூன், கிளை செயலாளர் காந்தராஜ், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply