மன்னிப்பு கேட்க முடியாது – இனி வரும் படங்களில் விமர்சிக்க மாட்டேன் என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் ‘சர்கார்’. கதை திருட்டு சம்பந்தமான பல பிரச்சினைகளும், சர்ச்சைகளும் சந்தித்தது. ‘சர்கார்’ படத்தில் அரசின் இலவசங்களை விமர்சனம் செய்த காரணத்திற்காக தமிழக அரசிடம் மன்னிப்பு கேட்க முடியாது என ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய விதித்த தடையை மேலும் 2 வார காலம் நீட்டித்து, அதுவரை முருகதாஸை கைது செய்ய தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.
Leave a Reply