மக்களோடு பயணிப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்: சண்முகபுரம் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் தீவிர வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி :-
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் மாநகராட்சிக்குட்பட்ட 37, 41 மற்றும் 42வது வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன்பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மண்டலத்தலைவர் அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரச்சாரத்தின்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:
எந்த பிரச்சினை என்றாலும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும் மக்களோடு மக்களாக எப்போதும் உங்களுடன் இருந்து பணியாற்றி வருகிறேன். அதிமுக, பிஜேபி, தவெக ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு மூன்று மாதத்திற்கு முன்பு தான் நாங்களும் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு வருவார்கள்.
ஆனால் 5 ஆண்டுகாலம் கொரோனா நோய்தொற்று, பெரும் மழை வெள்ளம் காலத்தில் என்ன நடந்தது என்று பார்ப்பத்குகூட வந்திருக்க மாட்டார்கள். உங்களுடைய இன்பம் துன்பம் கோவில் விழா என அனைவற்றிற்கும் பங்கெடுத்துக்கொண்டது. திமுகவும் நானும் தான்.
10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நடைபெறாத திட்டங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளது. 2015ல் மழை வெள்ளத்தின்போது நானும் எனது தந்தையாரும் மக்கள் பணியாற்றியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதேபோன்று 2023 நூறு ஆண்டுகள் மக்கள் காணாத பெருமழை வெள்ளம் ஏற்பட்டபோதும் உங்களோடு நின்றேன்.
ஆனால் எதிரணியில் இருக்கும் வேட்பாளர்கள் 10 ஆண்டுகளாக எந்த பகுதிக்கும் வந்து பணியாற்றிருக்க மாட்டார்கள். தேர்தலுக்குப பிறகு மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல் மாற்றுத்திறனாளிகள், முதியோர் என அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நான்முதல்வன் திட்டத்தின் மூலம் படித்த 52 பேர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல் தூத்துக்குடியில் முதல்வர் படைப்பகம் உருவாக்கும்போது நம் வீட்டு குழந்தைகளும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற உயர்பதவிகளுக்கு வரமுடியும்.
பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ள திமுக அரசு மீண்டும் தொடர வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுக்காக பணியாற்ற 2வது முறையாக மீண்டும் முதலமைச்சராக வேண்டும். அதற்காக அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தமிழ்நாட்டு நலன், நமது மண் மானம் காத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான எனக்கு அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். முன்னதாக தாமோதரநகர் முனியசாமிகோவில் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் கீதாஜீவனுக்கு திருப்பணிகளுக்கு அவர் செய்த உதவிகளை எடுத்துக்கூறி மக்கள் நன்றி கூறினார்கள்.
அதேபோன்று சண்முகபுரம் முதல்தெரு, பனங்காடு சந்து முதல் விஇ சாலை வந்தடையும் பகுதி வரை புதிய சாலைகளை அமைத்து கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கும், பொதுமக்கள் அச்சமின்றி செல்வதற்கு கண்காணிப்பு கேமரா அமைத்து கொடுத்த அமைச்சர் கீதாஜீவனுக்கு அப்பகுதிமக்கள் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் சகாயராஜ், வடக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், திமுக மாவட்ட மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன்ஜேக்கப், முருகஇசக்கி, தொமுச முத்துராஜ், முருகன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், ராஜ்குமார், ஏசுவடியான், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் பாப்பாத்தி, சரவணக்குமார், அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், வட்டச்செயலாளர்கள் சுரேஷ்மகாராஜா, மாரிமுனீஸ்வரன் மற்றும் மணி, அல்பர்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.











Leave a Reply