வேலூர் தொகுதிக்கு வினோத் கண்ணன், அணைக்கட்டு தொகுதிக்கு வேல்முருகன் வேட்பாளர்களாக தேர்வு!

Share Button

வேலூர் :-

எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முதன்முறையாக எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம் அதிரடியாக களத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது.

பல சவால்களையும், சதிகளையும், எதிர்ப்புகளையும், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அனைத்து சவால்களையும் முறியடிக்கின்ற வகையில் பல்வேறுகட்ட அரசியல் முன்னெடுப்புகளும், நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

மேலும், கட்சியைப் பலப்படுத்தவும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அரசியல்படுத்தவும் உயர்மட்டக் குழுவை அமைத்து கண்காணித்து வருகிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். அந்த வகையில் அனைவருக்கும் உகந்த ஊக்கத்தையும், தகுந்த பயிற்சியையும் கட்சியின்  தலைமை வழங்கி வருகிறது.

சரி விஷயத்துக்கு நேரடியாக வருவோம்…

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முறையாக விருப்பமனு பெற்றவர்களிடம் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பனையூர் இல்லத்தில் முதற்கட்டமாக சுமார் 45 வேட்பாளர்களுடன் தவெக கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் நேர்காணல் நடத்தினார்.

வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளர் ரெடி – யார் இவர்?

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக வினோத் கண்ணன் அவர்களை வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பரிந்துரையின் பேரில், அவரை களமிறக்க தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக வேலூர் தவெக நிர்வாகிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

முதன்முறையாக தவெக சார்பில் அரசியல் களத்தில் வேட்பாளராக களத்தில் குதித்திருக்கும் வினோத் கண்ணன் அவர்கள் வேலூர் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் செயல்பாடுகள் சமூக நலன், மக்கள் நலன், பொதுநலன் எதுவாக இருந்தாலும் களத்தில் இறங்கி களமாடி வெற்றி பெறும் ஆற்றல் கொண்டவர் வினோத் கண்ணன் என்கின்றனர் அப்பகுதி மக்கள். ஆகவேதான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக வினோத் கண்ணனை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று வேலூர் பகுதிவாழ் மக்களின் கருத்தாக உள்ளது.

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளர் ரெடி – யார் இவர்?

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு பலரும் விருப்பமனு அளித்திருந்த நிலையில் முதற்கட்டமாக நேர்காணல் நடத்தப்பட்டதில், வேலூர் மேற்கு மாவட்ட த.வெ.க செயற்குழு உறுப்பினராக கட்சிப் பொறுப்பு வகித்து வரும் வினோத் கண்ணன் மற்றும் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் ஆகியோரை வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கி, தற்போது தவெக அரசியல் கட்சியிலும் அதிரடியாக களத்தில் மம்பரமாக சுழன்றுகொண்டிருக்கும் அணைக்கட்டு தொகுதி வேட்பாளர் வேல்முருகன் தொடர்ந்து களமாடிவருகிறார் என்கின்றனர்.

தவெக கட்சியின் தலைவர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க நாங்கள் வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் அதை தலைவர் விஜய்க்கு சமர்ப்பிப்போம் என்று சபதம் ஏற்று தொகுதியில் அயராக உழைத்து வருகிறார்கள் இருதொகுதி வேட்பாளர்களும் .

வேலூர் அகரம்சேரியில் கடந்த பிப்-23ம் தேதி நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன் சிறப்பாக செய்து முடித்து தமிழ்நாட்டிலேயே ஒரு முன்மாதிரி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக நடத்திக் காட்டியதால் கட்சியன் தலைவர் விஜய்யின் நன்மதிப்பையும், நம்பிக்கையயும், கவனத்தை பெற்றதினால் இவர்கள் இருவரும் முதல் நேர்காணலிலேயே தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் விஜய்க்கு கிடைத்த ரிப்போர்ட்?

வேலூர் கோட்டை திமுக கோட்டையாக தற்போது இருக்கிறது. பெரும்பாலும் வேலூர் மாவட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் வசித்து வருகிறார்கள். இதில் கணிசமாக முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாக்கும் அதிகம். இதில் இஸ்லாமியர்களின் வாக்குகளும் உண்டு. இவைகளை குறிவைக்கவே, தவெகவில் செயற்குழு உறுப்பினராக இருக்கும் வினோத் கண்ணன் பெயர் அடிப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவரும் முதலியார் சமூகத்தை சார்ந்தவர் என்பதினால்…

அதுமட்டுமல்லாமல், வேலூர் நாராயணி பீடத்தின் மடாதிபதி சக்தி அம்மாவின் அருளாசி பெற்றவர், மாணவர்கள் இளைஞர்கள் பெற்றோர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றவர் வினோத் கண்ணன் என்பது கூடுதல் சிறப்பு. சிட்டிங் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனும் முதலியார் சமூகம். இப்படியிருக்க இந்த 2026 தேர்தலில் வேலூர் சட்டன்ற தொகுதியில் கடும் போட்டி இருக்கும் என்பதே உண்மை.

பலமும் ஆதரவும்..

கட்சியை பலப்படுத்துவதிலும், தொண்டர்களை அரவணைப்பதிலும் வினோத் கண்ணணுக்கு நிகர் வினோத் கண்ணனே என்று சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள். முதற்கட்ட நேர்காணலில் தேர்வாகி இறுதிகட்ட வேட்பாளர் லிஸ்டிலும் வேலூர் தொகுதிக்கு வினோத் கண்ணனும், அணைக்கட்டு தொகுதிக்கு வேல்முருகனும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்கின்றனர் நம்பிக்கைக்குரிய வட்டாரம்.

தலைவர் தளபதி வழியில் களத்தில் அவரை முன்னிருத்தி நாங்கள் வெற்றிப்பெறுவோம் சாதனைபடைப்போம் என்று சூளுரைக்கின்றனர் வேலூர் தொகுதி வேட்பாளர் வினோத் கண்ணனும், அணைக்கட்டுத் தொகுதி வேட்பாளர் வேல்முருகனும்.

வேலூரிலிருந்து நமது நிருபர்…

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *