பொதுமக்கள் எளிதாக சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கும் வகையில் 600 சிறப்பு பஸ்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது தமிழக அரசு விரைப்புப் போக்குவரத்துக்கழகம் சார்பில் திருச்சி, மதுரை, கோவை, சேலம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு தினசரி 3,500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேர்தலையொட்டி விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க விரும்புவார்கள். அவர்கள் எளிதாக சென்று வரும் வகையில் தினசரி இயக்கும் பஸ்களுடன் கூடுதலாக 600 பஸ்களை சேர்த்து இயக்க முடிவு செய்துள்ளோம்.
இதன் மூலம் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் எளிதாக சொந்த ஊருக்கு பயணிக்க இயலும்.












Leave a Reply