Description
கரையில் மோதி நுரைக்கும் சொற்கள் எனது கவிதை தொகுப்பு. அதிக ஒப்பனை இல்லாமல் கண்முன் நடக்கும் நிதர்சன நிகழ்வுகளின் தரிசனம் எளிய கவிவரிகளில் படைத்துள்ளேன்.பார்வையின் ஒளிதீண்டலில் உயிர்பெற்ற உணர்வுக்கோலங்களை தங்கள் கரங்களில் தவழ விட்டுள்ளேன். சொற்கள் அனைத்தும் கவி ஓவியங்களில் உயிர் பெறுகின்றது. வாசித்து ஆதரவு தரவிருக்கின்ற வாசகர்களுக்கு நன்றி மலர்கள்.