ஒட்டப்பிடாரம் தொகுதியில் தவெக வேட்பாளர் மதன்ராஜா வெற்றி!

Share Button

ஒட்டப்பிடாரம் தொகுதியில் தவெக வேட்பாளர் மதன்ராஜா 29083 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக, அமமுக, தவெக, நாம்தமிழர், புதிய தமிழகம், தமிழக வாழ்வுரிமைக்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 பேர் தேர்தல் களத்தில் இருந்தனர்.

வாக்கு எண்ணிக்கையில் முதல் 2 சுற்றுகளிலும் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்துவந்தார். 3வது சுற்றுக்தகு பிறகு தவெக வேட்பாளர் மதன்ராஜா தொடர்ந்து முன்னிலை பெற்று வநதார். இறுதி சுற்றான 24வது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் மதன்ராஜா 81ஆயிரத்து 623 வாக்குகள் பெற்று 29 ஆயிரத்து 083 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

திமுக வேட்பாளர் ராமஜெயம் 52,542 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் 25,871 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி அனுசியா 17,279 வாக்குகளும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி 15,050 வாக்குகளும் பெற்றனர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.