தொடர்ந்து 11 ஆண்டுகளாக ஒரு நிறுவனம் பயிற்சி வழங்குநராக (Training Vendor) இருப்பது என்பது மகத்தான சாதனை
தமிழ்நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றில், தொடர்ந்து 11 ஆண்டுகளாக, ஒரு நிறுவனம் பயிற்சி வழங்குநராக (Training Vendor) இருப்பது என்பது, மகத்தான சாதனை.
அதை சாதித்து வருவது நண்பர் பிரசன்னா வெங்கடேசன் அவர்களின் Vertical Progress நிறுவனம். எல்லா ஆண்டுகளிலும், என்னையும் இணைத்துக்கொண்டு பயணித்துள்ளார் என்பதில், எனக்கு நன்றியும் பெருமையும் உண்டு.
கொரோனா முடக்க காலத்திற்குப் பிறகு, மீண்டும் அந்த நிறுவனத்தில், கடுமையான COVID தடுப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடந்த பயிற்சி நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
7 வாரங்களில், 19 பயிற்சியாளர்கள் கொண்டு, 260 வகுப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது, என்ற வெற்றி செய்தியை, மகிழ்வுடன் இங்கு பதிவு செய்கிறேன். உடன் பயணித்த பயிற்றுநர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
முருக பாரதி, புதுக்கோட்டை
Leave a Reply