இரயில் ஓட்டுநர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்

Share Button

இரயில் ஓட்டுநர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் :

இரயில் ஓட்டுநரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst., Loco Pilot” (ALP) என்றும் கூறுவார்கள்.

இன்றைய சூழ்நிலையில் அவர்கள் 13 மணி நேரம்வரை வேலை செய்கிறார்கள். சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு.

குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை, அடுத்த பணிக்குத் திரும்புவதற்கு. ஒரு இரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது.

100 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது. ஒரு இரயில் வண்டி பிரேக் அடித்தால் அது நிற்பதற்கு எடுத்துக் கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தைவிட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது, தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர்.

அதெல்லாம் சரி… இந்த இரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா…? அப்படித் தூங்கினால் எப்படி கண்டு பிடிப்பது…?

தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், இரண்டு பேருமே தூங்க முடியாது. யாராவது ஒருத்தர் விழித்திருக்க வேண்டும்.

VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களைத் தூங்க விடாது. ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அதில் உள்ள பொத்தானை அமுக்க வேண்டும்.

அப்படி அமுக்கவில்லை என்றால், எட்டு வினாடிக்குப் பிறகு விளக்கெரியும். அதையும் அவர்கள் உதாசீனப் படுத்தினால், அடுத்த எட்டு வினாடிக்கு சத்தமும் சேர்ந்து கொண்டு விளக்கெரியும்.

அதையும் உதாசீனப் படுத்தினால், வண்டி தானாகவே நின்று விடும். Automatic Braking System மூலம்.

ஆனால், அந்த பைலட்டுகள் வண்டியின் வேகத்தைக் கூட்டுவது, குறைப்பது, ஹரன் அடிப்பது போன்ற வேலைகளில் இருந்தால், அந்தப் பொத்தானை அமுக்க வேண்டியதில்லை.

இந்தக் காலத்தில்தான் பட்டன் போன்ற பொத்தானை அமுக்கிற வேலை. முன் நாளிலெல்லாம் ஒரு பெரிய கம்பியை இழுத்து இழுத்து விட வேண்டும். அதன் பெயர் “Deadman’s Lever”.

இன்று வரையில் இரயில்வே ஓட்டுநர்களுக்குத் தனியாகக் கழிப்பறைகள் இல்லை. அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் அவர்கள் அடக்கி வைக்க வேண்டும்.

வயதான ஓட்டுநர்கள் சிலர் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பைகளில் உச்சாவைப் பிடித்து வைத்து கொள்ளத்தான் முடியும்.

ராத்திரி பத்து மணிக்கு வண்டி எடுத்தால் காலை 08.00 மணி ஆகும், அடக்கிக் கொண்டுதான் போக வேண்டும்.

ஆனால், மலம் கழிப்பது என்பது முடியாத விஷயம். ஒரு நிமிடம்தான் ஸ்டேஷனில் நிக்கும், அடுத்து சிக்னல் விழுந்தவுடன் வண்டி எடுக்கனும்.

110 kmph குறையாமல் வண்டி ஓட்டனும். பஞ்சுவாலிட்டி இருக்கு. இதிலே இன்ஜின் பிராபளம், டிராக்கில் ஏதேனும் பிராப்ளம், சிக்னல், மனிதர்கள் சூசைட் என கண் விழித்து ஓட்டனும்.

கேட் horn அடிக்கனும். 60 செகண்டுக்கு vcd பிரஸ் பன்னனும். அசிஸ்டெண்ட் தூங்கிட்டா அவரை எழுப்பனும். 19 kwh கரண்ட்டின் கீழ் வேலை. இன்ஜீன் சூடு.

ராத்திரியில் வண்டியின் வேகத்தைப் பொருத்து குளிரின் கொடுமை. எக்ஸஸ் ஸ்பீடு போகக் கூடாது. டிரையின் டைமிங் மெயிண்டன் பன்னனும். சிவப்பு சிக்னலைத் தாண்டினால் ரிமூவ்டு ப்ரம் சர்வீஸ் எனப் பல அழுத்தங்கள் இருக்கு.

இருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கனும். காடுகளில் போகும்போது செயின் இழுத்து வண்டி நிக்கும்போது யார் உதவியும் இரவு நேரத்தில் கிடைக்காது.

சிங்கம், புலி, யானை என இருக்கும். டைம் குறைந்தாலும் விளக்கம் எழுதிக் கொடுக்கனும். இதேதான் பகல் நேரங்களிலும்.

சரக்கு வண்டி எனில் எக்ஸ்பிரசுக்காக லூப் லைனில் ஒதுக்குவார்கள். அப்போ ஸ்டேஷன் மாஸ்டர் ரூமுக்கு ஓடனும். அவர் வேண்டா வெறுப்பாக அனுமதிப்பார்.

முடியாத பட்சத்தில் வாட்டர் கேனில் தண்ணீர் இருந்தால், பொது வெளிக்கு மறைவா போய் இருக்க வேண்டியதுதான்.

சரக்கு வண்டியும் 16 டூ 18 மணி நேரத்துக்கும்மேல் வேலை செய்பவர்கள் உண்டு. இதில் சாப்பாடு பிரச்சனை இருக்கு. கடைகளைத் தேடி ஓடனும். சாப்பிடும் நேரத்தில் வண்டி ஓட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

கண்ட்ரோலர்களோ “எல்லாரும் சாப்பிட்டீர்களா, சாப்பாடு வாங்கி விட்டீர்களா?” எனக் கேட்பதும் இல்லை, அதற்கான நேரமும் ஒதுக்குவதில்லை.

இப்படியாக இரயில் ஓட்டுநர்களின் பயணம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது… இரயில் ஓட்டுநர்களின் கவனம் முழுவதும் விழிப்புநிலையிலேயே இருக்கும்.

இரயில் பயணங்கள் முடிவதில்லை.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *