தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும்
தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவிப்பு.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக பணிகளை மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமைடைந்து வருவதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்றும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டது. ஆகவே திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும்.
21 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 138 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கும் ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 4ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, இந்த தேர்தலை சரியான முறையிலும் பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.