கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ”அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை” படைப்பிற்கு பால சாகித்ய புரஸ்கார் விருது – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வேறென்ன தெரியும் இவனுக்கு..?
படைப்பிலக்கியத் தளத்தில் நாற்பதாண்டுக் காலமாக கொஞ்சமும் உற்சாகம் குறையாமல் இயங்கி வருகின்றேன். தொடர்ந்து எழுதியும் வருகிறேன்.
இந்தச் சமுதாயத்தில் இருந்து நான் பெற்றதையே மீண்டும் திருப்பித் தருகிறேன். அதிலும் கடந்த முப்பதாண்டுகளாக குழந்தைகளுக்கென எழுதிவதில் பெருமகிழ்ச்சி.
நாளைய சமுதாயத்தின் சிற்பிகளான குழந்தைகளுக்கு எழுதுவதென்பது மிகவும் மனநிறைவு தருகிற விஷயம்.
எழுதுவதையும் ஊரெல்லாம் நண்பர்களின் அன்பைப் பெற்றதையும் தவிர வேறென்ன தெரியும் எனக்கு..?
நான் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலுக்கு சாகித்திய அகாதெமியின் பால சாகித்திய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை விருது அறிவித்த நிமிடத்திலிருந்து நண்பர்களின் பேரன்பில் திளைத்துப் போனேன். பேசிய எல்லோருமே, “இந்த விருது எங்களுக்கே கிடைத்ததுபோல் பூரித்துப்போனோம்’ என்று சொன்னது என்னை மேலும் நெகிழ வைத்தது.
எழுதுவதனால் என்ன பெற்றோம் என்று கேட்பவர்களிடம், இதைவிட வேறென்ன வேண்டுமென்று சொல்லத் தோன்றுகிறது.
முகநூலில் எனக்கான வாழ்த்துப் பதிவினை வெளியிட்ட என் அன்பான நண்பர்கள், எனக்குப் பிடித்த படைப்பாளர்கள், பாசமிகு தம்பிகள், தங்கைகள் என எல்லோரின் பேரன்புக்கும் மாற்றாக உங்களின் கைகளை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொள்கிறேன். உங்கள் அன்பு இன்னும் எழுத என்னை ஆற்றுப்படுத்தினேன்.
தனது ட்விட்டரில் எனக்கான வாழ்த்தினைப் பகிர்ந்த மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களுக்கும் மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கும் இன்னும் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்ட பல அரசியல் தலைவர்களுக்கும் என் பேரன்பின் நன்றியும் மகிழ்ச்சியும்.
Leave a Reply