மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா

Share Button

 

சென்னை :-

அ.தி.மு.க கொடியுடன் ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா

நான்கு வருடங்களுக்குப் பிறகு அ.தி.மு.க வின் பொன்விழா ஆண்டு நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இன்று (16/10/2021) ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற சசிகலா அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின் எம்.ஜி.ஆர் நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறைச்சாலைக்கு செல்வதற்கு முன்பாக ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா ஜெயலலிதா சமாதியின் மீது சத்தியம் செய்தார். பிறகு, தண்டனை காலம் முடிந்து தற்போது மீண்டும் ஜெயலலிதா நினைவிடம் சென்று உள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் இறங்குவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் அரசியலிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் காரில் அ.தி.மு.க கொடியுடன் ஜெயலலிதா சமாதிக்கு சென்றது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

பத்திரிகையாளர்களுக்கு பேட்டி

மேலும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா நான் ஏன் தாமதமாக வந்தேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். இத்தனை வருட காலமாக எனது மனதில் இருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துள்ளேன்.

அதிமுக தொண்டர்களை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன் எனக் கூறினார்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *