பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் காலமானார்

Share Button

பெரும் சோகத்தில் தமிழ் திரையுலகம்

பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன்(65) சென்னையில் இன்று (08/10/2021) உடல் நல குறைவு காரணமாக  காலமானார்.தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் 1400 பாடல்களைப் பிறைசூடன் எழுதியுள்ளார் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் “கலைச்செல்வம்” விருதையும் பெற்றிருக்கிறார்.

கவிஞருக்கு முதலமைச்சர் இரங்கல்

கவிஞர் பிறைசூடன் மறைவுக்குத் தமிழ் திரையுலகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திருவாரூர் மண்ணிலிருந்து திரை இசையில் தனக்கென தனி இடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் காலத்தால் அறியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய பிறைசூடன் மறைவு தமிழ் திரையுலகிற்குப் பேரிழப்பு என தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *