கண்ணீர் பிரார்த்தனை கடவுள் கைவிட்டுருவாரா

Share Button
கண்ணீர் பிரார்த்தனை கடவுள் கைவிட்டுருவாரா…
உலகம் தழுவிய Medical Conference பெரும் விழாவில் தன் ஆராய்ச்சி கட்டுரையை பெருமையுடன் சமர்ப்பித்து விட்டு, காரில் தன் ஊரை நோக்கி புறப்பட்டார் அந்த டாக்டர். வழியில் பெரும் மழை. அவரால் காரை ஓட்ட முடியவில்லை.
ஒரு கிராமத்தை தாண்டியபொழுது, சாலை பல பிரிவுகளாக பிரிந்தது. வழிகாட்டி பலகையும் அந்த மழை புயலால் தூர வீசப்பட்டிருந்தது. டாக்டருக்கு எந்த வழியில் செல்வது என்று புரியவில்லை. இதுவாகத்தான் இருக்கும் என்று அவராகவே முடிவு செய்து கொண்டு, மிக கஷ்டப்பட்டு ஒரு வழியில் காரை பயணித்தார்.
ஆனால் அந்த வழி ஆள் அரவமற்ற காட்டின் வழியே சென்றது. மழையும் புயலும் அதிகமாக வீசியது. டாக்டருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை ஒதுங்க எந்த இடமும் இல்லை. தூரத்தில் ஒரு சிறு வீடு தெரிந்தது. டாக்டர் அங்கே சென்று கதவை தட்டினார்.
ஒரு இளம் பெண் கதவை திறந்தார். அவர் இருந்த நிலையை பார்த்து உள்ளே அழைத்து அமரச் சொன்னார்.
ஏழ்மையான வீடு. வீட்டில் யாரும் இல்லை. இரண்டு வயது குழந்தை ஒன்று தொட்டிலில் தூங்கி கொண்டிருந்தது. அந்த பெண் அன்போடு சூடான தேநீர் ஒன்றை கொடுத்து அருந்த சொன்னார்.
பிரம்ம ஞானம்
பின் விசாரித்ததில் அவர் தவறான பாதையில் வந்ததை புரிந்து கொண்டு, இன்னும் சிறிது தூரம் சென்றால் ஒரு பிரிவு வரும். அங்கே வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால், நீங்கள் செல்ல வேண்டிய ஊரின் பிரதான சாலை வரும் என்று விளக்கினார்.
மழை குறையும் வரை ஓய்வெடுங்கள். நான் பிராத்தனை செய்து விட்டு வருகிறேன் என்று கூறி, அறையின் மறுபக்கத்தில் அமர்ந்து இறைவனை நோக்கி கண்ணீர் மல்க முணுமுணுத்தவாறு வெகு நேரம் பிரார்த்தி விட்டு, மீண்டும் டாக்டர் அருகில் வந்து அமர்ந்தார். என்ன பிரார்த்தனை செய்தீர்கள்? என்று டாக்டர் வினவினார்.
அப்பெண் கண்ணீர் மல்க, தன் குழந்தையை காட்டி, அவனுக்கு தலையில் ஒரு பெரும் பிரச்னை. Brain nerves சரியாக வேலை செய்யவில்லை. இதை சரி செய்வதென்றால் ஒரே ஒருவரால்தான் முடியும். பெரும் செலவாகும். என் ஏழ்மை நிலையில் கடவுளிடம் பிரார்த்திருப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறி அழுதார்.
யார் அந்த டாக்டர்?
யார் அந்த டாக்டர்? என்று கேட்டார். புகழ் பெற்ற Neurosurgeon டாக்டர் சிவகணேசன் என்று அந்த பெண் சொன்னவுடன், டாக்டர் அதிர்ந்துவிட்டார். அவர் தான் அந்த டாக்டர் சிவகணேசன். அந்த எளிய பெண்ணின் பிரார்த்தனையே இறைவன் தன்னை அங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் என்று உணர்ந்தார்.
பின் நடந்தது காவியம். அந்த பெண்ணையும், குழந்தையையும் தன் காரிலேயே அழைத்து சென்று சரியான மருத்துவம் செய்து குழந்தையை காப்பாற்றினர்.
பிரார்த்தனை வலிமை வாய்ந்தது
நேர்மையான எண்ணங்கள், பிரபஞ்சத்தில் கலந்து, அந்த செயல் செய்வதற்கான சூழ்நிலையையும், தகுதியான நபரையும் தேர்ந்தெடுத்து, அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும். அருட்கடவுளின் அலை இயக்க தத்துவம் புரிந்தவர்களுக்கு, எண்ணத்தின் வலிமையும், செயலாற்றும் தன்மையும் எளிதில் புரியும். எண்ணம் எழும் இடமோ சிறு புள்ளி, விரிந்து முடியும் இடமோ அகண்டாகரம்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *