பிக்பாஸ் சீசன் 5 ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா? புதுவரவாக தொடங்கிய கமல்
சென்னை :-
மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்திப்பெற்று ஆர்வமுடன் அனைவரும் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக இந்த பிக்பாஸ் ஷோ அமைந்துள்ளது.
இதுவரை பிக்பாஸ்
இதுவரை நான்கு சீசன்கள் முடிந்த நிலையில், ஆரம்பிக்கலாமா? பிக்பாஸ் சீசன் 5 என்று உற்சாகத்துடன் நேற்று முதல் தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியாகியுள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி என மொத்த நான்கு சீசன்களில் பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்சசியை நடிகர் கமல்ஹாசன் மிகவும் நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் தொகுத்து வழங்கி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரொம்பவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.
இனி பிக்பாஸ்
பிக்பாஸ் சீசன் 5 வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கம்போல இந்த பிக்பாஸ் சீசன் 5 ஐயும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் எனவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆரம்பிக்கலாமா…? பிக்பாஸ் சீசன் 5
பிக்பாஸ் சீசன் 5 க்கான முதல் புரமோ வீடியோவை நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஆகஸ்ட் 31 2021 – (நேற்று) வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பிக்கலாமா…??? பிக்பாஸ் சீசன் 5