கடவுளிடம் முற்றிலும் சரணாகதி அடைதல் என்பது அவ்வளவு சுலபமான ஒரு செயல் அல்ல

Share Button
ஆன்மீகத்தின் ஆரம்ப நிலை :
கடவுளிடம் முற்றிலும் சரணாகதி அடைதல் என்பது அவ்வளவு சுலபமான ஒரு செயல் அல்ல. மனம் எப்போதும் சந்தேககங்களையும் இது போன்ற கேள்விகளையும் எழுப்பிக் கொண்டே இருக்கிறது
“நான் கடவுளை பார்த்ததுமில்லை, அறிந்ததுமில்லை. அப்படியிருக்க, அவனிடம் அன்புடன் சரண்புக என்னால் எப்படி முடியும்?”
இவ்வாறான எண்ணங்கள் நம்மை மேலான எண்ணங்களிலிருந்து கீழே இழுத்து உலக விஷயங்களில் செலுத்திவிடும். அடுத்து குரு சொல்லித்தரும் பயிற்சிகளை சரியாக கடைபிடிப்பது அவசியம். குரு வாக்கியத்தில் முழு நம்பிக்கை வைத்து சீடன் அதன்படி நடந்தால், சில நாட்களில் தன் மனதிலுள்ள மாசெல்லாம் மறைந்து தெய்வ ஒளி தன்னுள் தோன்றுவதை உணர்வான்.
குருவிடம் கொள்ளும் நம்பிக்கையால் மட்டுமே எல்லாம் கிட்டும் என்பது முற்றிலும் உண்மை. சீடன் தன்னுடைய குருவை இடைவிடாது சிந்தித்து தியானம் செய்வதால் சீடனுடைய மனமும் உடலும் புனிதம் அடைகிறது. குருவிடம் சீடனுக்கு நம்பிக்கை இருந்தால், அவன் ஞானத்தையும் பக்தியையும் அடைதல் மிகவும் எளிது.
அதேபோல உள்ளம் தூய்மை அடையாமல் கடவுளை தரிசிக்க இயலாது, எனவே இறைவனை அடைய நினைக்கும் ஒருவர் தனக்கு பல வழிகளில் துன்பங்களும் சோதனைகளும் நேர்ந்தாலும் மனதில் மாசுபடாமல் இருக்கவேண்டும்.
இறைவனை அறிய சரியான குரு தேவை :
நாம் இறைவனை அறிய நமக்கு சரியான குருவானவர் தேவை, இந்த காலத்தில் நிறைய போலி குருக்கள் இருக்கிறார்கள் நான் தான் குரு என்று சொல்லிக்கொண்டு திரிவார்கள் அவர்களால் நமக்கு எந்த ஒரு பலனும் இல்லை. உண்மை குருவானவர் நன்கு அறிந்திருப்பர் அதாவது எல்லாருக்கும் குரு இறைவன் மட்டுமே என்று மற்றும் நாம் அவருடைய கருவி தான் உணருவார்.
கடவுளை அறிந்தவரால் மட்டுமே மற்றொருவருக்கு முக்தி வழியை காட்டமுடியும், கடவுளை காணாத ஒருவர், இறைவனிடமிருந்து கட்டளையை பெறாத ஒருத்தன் எப்படி மற்ற உயிர்களை உலக பந்தங்களிலிருந்து விடுவிக்க முடியும்.
யார் உண்மையான குரு?
அதையும் மீறி போலி குருவிடம் போனால் இரண்டு பேரும் துன்பத்தை தான் அனுபவிக்கனும். எனவே தான் ஆன்மீகத்தில் உண்மை குருவானவர் அவசியமாகிறார். இறைவனிடம் ஆழ்ந்து பிராத்தனை பண்ணும்போது நமக்கு உண்மை குருவின் தொடர்பு கிடைக்கும். இதை இறைவனே இந்த சீடனுக்கு இந்த குருவே உகந்தவர் என்று அனுப்புவார்.
எனவே இறைவன் மீது காதல் கொள்ளும் ஒருவருக்கு உண்மை குரு கிடைப்பது உறுதி. ”மூன்றின் அருள் உயிருக்கு உள்ளது — குரு, பகவான், பக்தர்; ஆனால் ஒன்றின் அருளின்றி அது பாழாய்ப்போகிறது” என்ற ஓர் அழகிய பழமொழி வைணவர்களிடையே வழங்கி வருகிறது. இதன் கருத்தாவது – சீடன் குருவின் அருள் பெற்றிருக்கின்றான். இறையருளால் உயர்ந்த நோக்கங்கள் உள்ளவனாகவும் இருக்கின்றான்; இவ்விரண்டோடு சத்சங்கமும் அவனுக்கு உண்டு.
இப்போது அவனுக்கு வேண்டியது ஒன்றின், அதாவது மனதின் அருள், மனம் சாதகமாய் இருந்துவிட்டால், எல்லாம் அடையப்பெறும். மனம் அமைதியாக இருக்கும் போது தான் ஏனையவற்றின் அருளை உணர முடியும். மனதை அடக்க வேண்டும். இதைச் செய்தாலான்றி பிற முயற்சிகள் பலன் தராது.
உங்கள் மனது சுற்றித் திரிய இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. அதற்கு முன்னராய் கடிவாளத்தை இழுத்துப் பிடியுங்கள். யானையை அதன் பாகன் நன்றாகக் பழக்கிய பிறகே தன் விரும்பியவாறெல்லாம் அதைச் செய்விக்கிறான்.
ஆன்மீகத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் அதுபோல் நமது கட்டளைப்படி நடக்க நம் மனதை பழக்க வேண்டும். அது நம் எஜமானனாக இருக்க கூடாது. அன்பே சிவம்!
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *