அண்ணா பல்கைலக்கழகம் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது

Share Button

சென்னை :-

அண்ணா பல்கைலக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

அண்ணா பல்கைலக்கழகம் இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங் பிரப்பித்த நிலையில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில், பல கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தி வந்தனர். தொற்றுப் பரவல் அதிகமாக பரவிவந்ததால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் காரணமாக பல முக்கிய தேர்வுகள் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டன. ஆகையினால், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, பல முக்கிய தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்துவந்தன.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்

அதனைத் தொடர்ந்து இன்று அண்ணா பல்கைலக்கழகம் இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டுக்கான நவம்பர், டிசம்பர் மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *