மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார்

Share Button
உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (13 ஆகஸ்ட்) காலமானார்.
சுவாசக் கோளாறு காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தத நிலையில், தொடர்ந்து பின்னடைவே காணப்பட்டது. தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்த நிலையில் மதுரை ஆதீனம் சிக்ச்சை பலன் இன்றி (13 ஆகஸ்ட்) காலமானர்.
மதுரையாதீனம் பரிபூரணம் சைவத்தை தென்னகத்தில் நிலை நிறுத்தவும் நீற்றின் ஒளி எங்கும் பரவவும் மதுரையில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பெற்ற ஆதீனத்தின் 292ஆவது மகாசந்நிதானம் ஆன்மீகபணி அரசியல் பணி சமுதாயப்பணி சமயநல்லிணக்கம் என பலவகையாலும் உழைத்து குரல்ஒலித்தார்கள்.
நாதகுரல் இன்று அடங்கியது சமயத்திற்கு தொய்வு ஏற்பட்டுள்ளது என்று தருமையாதீனம் தெரிவித்துள்ளார். ஆங்கில அறிவு திருமுறைபாடும் வல்லமை மாற்று சமயநூல்களின் அறிவு அவரிடம் சிறப்பாக இருந்தது.
தருமையாதீனத்தில் ஞானசம்பந்தம் இதழ் துணையாசிரியராக சட்டநாதத்தம்பிரானாக இருந்து பணியாற்றியவர்.
நாமும் அவரிடம் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளோம் என்கிறார் தருமையாதீனம். நம்மகாசந்நிதானம் பரிபூர்ணமானவுடன் ஆக்சிஜன் வைத்தநிலையிலேயே வந்து தனது அன்பை வெளிபடுத்தியவர்கள்
நாம் நேற்றையநாள் மருத்துவமனையில் சென்று பார்த்த போதும், எம்சடையை தடைவியும் தாடியை பிடித்தும் கண்ணில் ஒற்றிக்கொண்டார்.
தண்ணீர் கேட்டார் நாம் அவருக்கு ஸ்பூன்மூலம் கொடுத்தேன். அவர்க்கும் நமக்கும் கண்கள் குளமாயின.
மகாசந்நிதானம் ஆன்மா இறையடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்கின்றோம்.
அடுத்து பதவியேற்கும் இளவரசரும் தருமையாதீனத்தில் நெல்லையப்பத்தம்பிரானாக இருந்து சமயப்பிரச்சாரபணி செய்தவர்கள், அவர்விட்டுச் சென்ற பணிகள் ஆதீனம் செம்மையாக செய்து சைவம் வாழ பிரார்த்திக்கிறேன் என்று கூறுகிறார் தருமையாதீனம் அவர்கள்.
நன்றி: தருமையாதீனம் Dharumai Adheenam
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.