கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் 1056 பேருக்கு தீபாவளி பரிசு எம்எல்ஏ பன்னீர்செல்வம் வழங்கினார்!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆயிரத்து 56 பேருக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட தீபாவளி பரிசு பொருட்களை எம்எல்ஏ பன்னீர்செல்வம் வழங்கினார். கலசபாக்கம் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எல்.என். துரை தலைமை தாங்கினார். பொருளாளர் எம். எஸ். நைனா கண்ணு முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி அனைவரையும் வரவேற்றார். எம்எல்ஏ பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் மாவட்ட, ஒன்றிய மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கிளை செயலாளர்களுக்கு செல்போன், நாட்டுக்கோழி, இனிப்புகள், பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து பேசினார். இவ்விழாவில் அவைத்தலைவர் கருணாமூர்த்தி, முன்னாள் ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவரணி சீனிவாசன் நன்றி கூறினார்.
Leave a Reply