ஆட்டுக்குட்டிகள் கொடுத்த அமெரிக்க தமிழ்மக்கள்!

Share Button
கரம்கொடுத்தஇதயங்கள் : சக மனிதனுக்கு ஒரு பாதிப்பு என்னும்பொழுது, அருகில் இருப்பவர்களே கண்களை மூடிக்கொண்டு கடந்து செல்லும்பொழுது, அயல்தேசத்தில் இருந்தாலும் எம் மக்கள் தவிக்கின்றார்களே! என தவிப்போடு கருணையோடு கரம் நீட்டிய இதயங்களை என்ன சொல்லிப் பாராட்டுவது?
வணிகமாக மாறிப்போன மொய்விருந்து நிகழ்வை,
மனிதநேயத்திற்காகவும் நடத்த முடியும் என நிரூபித்துக் காட்டிய அமெரிக்க தேசத்தின் தமிழ்மக்கள்தான்..
மீண்டும் ஒருமுறை தமது மனித் நேயத்தைப் பறை சாற்றியுள்ளனர்.
பசிக்கின்ற ஒருவருக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பது சிறந்தது என்னும் பழமொழியில் இவர்கள் இரண்டையுமே செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விசயமாக இருக்கின்றது.
ஆம். கஜாப் புயலின்பொழுது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்க உதவிய இவர்கள், இன்று மக்களின் வாழ்வாதாரம் உயரவும் உதவியுள்ளார்கள் என்பது வணங்குதலுக்குரியதாக இருக்கின்றது.
67 குடும்பங்களுக்கு தலா 2ஆட்டுக்குட்டிகள் என  இதற்காக #ரூ536000 தொகையினை நிதியுதவியாக செய்துள்ளார்கள் என்பது பெருமைக்குரியதாகவும், நெகிழ்விற்குரியதாகவும் இருக்கின்றது.
அமெரிக்காவில் செயல்படும்  #நம்பிக்கைவிழுதுகள் அமைப்பு இதற்கான முன்னெடுப்பை எடுத்துப் பயணித்ததும்,
இதற்கு உதவிய AIMSIndia மற்றும் NAMCO அமைப்புகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
பயனாளிகளைக் கண்டறிந்து உதவிட வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு பெரும் மகிழ்வும், திருப்தியும்.
நம்பிக்கைவிழுதுகளின் இம்முயற்சிக்குப் பெருமளவில் பங்களிப்பு செய்து அமெரிக்க வாழ் தழிழ்சொந்தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
இயன்றதைச்செய்வோம்… இயன்றவரைசெய்வோம்!
இன்னும், இனியும் இனிதே தொடரும்…
நன்றி… யோகேஷ், மணிவண்ணன், சகுந்தலா, அகிலா, மருதையா, முத்துக்குமார்.
சிகரம் சதீஷ்குமார்

கல்வியாளர்கள் சங்கமம் அறக்கட்டளை

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *